Tuesday, 5 December 2023

மலேசியாவில் நடைபெற்ற மனக்கணித போட்டியில் யாழ்.மாணவர்கள் வெற்றி வாகை..!!!

SHARE

மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச மனக்கணித போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த விக்னேஸ்வரன் ருஷாந்தன் C பிரிவில் சம்பியனாக தெரிவாகியுள்ளார்.

மலேசியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டியில் இலங்கையை சேர்ந்த 60 மாணவர்கள் பங்கு பற்றி இருந்தனர். அதில் யாழ்ப்பாணத்தில் இருந்து 24 பேர் பங்கேற்றிருந்தனர்.

சுமார் 84 நாடுகளில் இருந்து, 2500க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்த கொண்ட நிலையில் , போட்டிகள் A,B,C,D,E மற்றும் F பிரிவின் கீழ் நடைபெற்றது.

அதில் யாழ்ப்பாணத்தில் இருந்து கலந்து கொண்ட 24 பேரும் தத்தம் பிரிவில் போட்டியிட்டதில், விக்னேஸ்வரன் ருஷாந்தன் சாம்பியனாக தெரிவான நிலையில் , சுதர்சன் அருணன் (வயது 6) வைஷாலி ரஜீவன் (வயது 8 ) அஷ்வினி அனோஜன் (வயது 8) ஆகியோர் இரண்டாம் இடத்தினை பெற்றுக்கொண்டனர்.

ஏனைய 20 மாணவர்களும் மூன்றாம் இடத்தினை பெற்றுக்கொண்டுள்ளனர்.











SHARE