யாழில். மருமகனின் தாக்குதலில் மாமனார் மரணம்..!!!
மருமகனின் தாக்குதலுக்கு இலக்காகிய மாமனார் உயிரிழந்துள்ளார்.
கரவெட்டி வதிரியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதில் அதே பகுதியைச் சேர்ந்த தேவராசா அன்ரன் (வயது-54) என்பவரே உயிரிழந்தவராவார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது,
கடந்த ஞாயிற்றுக்கிழமை மருமகன் மாமனாரை கொட்டனால் தாக்கியதாக தெரிவிக்கப்பட்டது.
இதில் படுகாயங்களுக்கு உள்ளானகுறித்த நபர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக் கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.
இந்நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று புதன்கிழமை முற்பகல் அவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாண நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா சடலத்தைப் பார்வையிட்டு பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.
இத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட நெல்லியடிப் பொலிஸார் சந்தேகநபரை கைது செய்து திங்கட்கிழமை பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தியபோது இன்று வியாழக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.