போதைப்பொருளுடன் யாழ்.பல்கலை மாணவன் கைது..!!!
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் கஞ்சாவுடன் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், நேற்றைய தினம் குறித்த மாணவனை பொலிஸார் கஞ்சா போதைப்பொருளுடன் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மாணவனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.