யாழ்.கோண்டாவில் புகையிரத நிலைய இருக்கைகளை சீரமைத்து தருமாறு கோரிக்கை..!!!
யாழ்ப்பாணம் - கோண்டாவில் புகையிரத நிலையத்தில் உள்ள இருக்கைகள் சேதமடைந்த நிலையில் காணப்படுவதனால் , பயணிகள் இருக்கை இன்றி சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
மருத்துவ தேவைகள் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக கொழும்பு உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு புகையிரத்தில் பயணிக்க வரும் வயோதிபர்கள் உள்ளிட்ட பயணிகள் இருக்க இடமின்றி நின்ற நிலையிலையே நீண்ட நேரம் புகையிரதங்களுக்காக காத்திருக்கின்றனர்.
நேரம் தாழ்த்தி புகையிரதங்கள் வருவதனால் , நீண்ட நேரம் நிற்க வேண்டிய நிலைமைகள் காணப்படுகின்றன. அதேபோன்று , கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நீண்ட தூர பயணங்களை மேற்கொண்டு , புகையிரதங்களில் வந்து இறங்குபவர்கள் , வீடு செல்வதற்காக வாகனங்களுக்கு காத்திருக்கும் போதும் இருக்கைகள் இன்றி சிரமங்களை எதிர்கொண்டு உள்ளனர்.
இதனால் புகையிரத திணைக்களம் இது தொடர்பில் கவனம் செலுத்தி இருக்கைகளை மீள அமைக்க வேண்டும் என நல்லூர் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ்.கௌசலா கோரிக்கை விடுத்துள்ளார்.