Friday, 15 December 2023

கிளிநொச்சியில் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கின..!!!

SHARE

கிளிநொச்சியில் நேற்று (14) பெய்த கடும் மழை காரணமாக கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட தருமபுரம், புளியம்பொக்கணை ஆகிய பிரதேசங்களிலுள்ள பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கின.

இதனால் பொது மக்கள் கடும் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர். பலர் தங்களின் இருப்பிடங்களிலிருந்து வெளியேறி நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தங்கியுள்ளனர்.

அத்தோடு, தர்மபுரம் மத்திய கல்லுரி மற்றும் தருமபுரம் இலக்கம் ஒன்று பாடசாலைகளுக்குள்ளும் மழைநீர் உட்புகுந்தமையால் இன்று (15) இப்பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

வெள்ள அனர்த்த பாதிப்புக்கள் தொடர்பாக கிராம சேவையாளர் பிரிவுகள் மற்றும் பிரதேச செயலகங்கள் விபரங்களை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.







SHARE