கனடா செல்லும் மாணவர்களுக்கு வெளியான அதிர்ச்சி தகவல்..!!!
கனடாவுக்கு செல்லும் மாணவர்களுக்கான வைப்புத்தொகை நிதியை இரட்டிப்பாக காட்டவேண்டுமென கனடா அறிவித்துள்ளது. இதனையடுத்து, அங்கு செல்லவுள்ள மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கனடாவுக்கு வருடந்தோறும் பல்வேறு நாடுகளில் இருந்து மாணவர்கள் கற்கை நெறியை மேற்கொள்ள செல்கின்றனர். இந்தநிலையில் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி மேற்படி நடைமுறைக்கு வரும் வகையில் மேற்படி அறிவிப்பை கனடா விடுத்துள்ளது.
இதன்படி, பல ஆண்டுகளாக 10 ஆயிரம் டொலராக இருந்த வாழ்க்கைச் செலவு தொகை ஜனவரி 1 முதல் 20, 635 டொலர்களுக்கான வைப்பு கணக்கை மாணவர்கள் காட்ட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.