Tuesday, 12 December 2023

கூகுளில் அதிகம் தேடப்பட்ட ஷாருக்கான், விஜய் படங்கள்..!!!

SHARE

கூகுள் நிறுவனம் 2023ம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட படங்கள் பட்டியலை வெளியிட்டு உள்ளது. இந்த பட்டியலில் தமிழ் சினிமாவில் இருந்து ரஜினி, விஜய் படங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளது. அதுவும் விஜய்யின் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான வாரிசு, லியோ ஆகிய 2 படங்களுமே அதிகம் தேடப்பட்ட டாப் 10 படங்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளது.

அதே போல் ஷாருக்கான் நடிப்பில் வெளியான பதான், ஜவான் ஆகிய 2 படங்களும் டாப் 10 பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

அந்த பட்டியலில் ஷாருக்கானின் ’ஜவான்’ முதல் இடம் பிடித்து இருக்கிறது. இரண்டாவது இடத்தில் சன்னி தியோலின் ’காதர் 2’ படம் உள்ளது. 3வது இடத்தில் கிறிஸ்டோபர் நோலனின் ‘ஓபன்ஹெய்மர்’ படம் உள்ளது.

4வது இடத்தில் பிரபாஸின் ’ஆதிபுருஷ்’ படம் இடம்பிடித்துள்ளது, 5வது இடத்தில் ஷாருக்கானின் ’பதான்’ படம் இருக்கிறது, 6வது இடத்தில் ’தி கேரள ஸ்டோரி’, 7வது இடத்தில் ரஜினியின் ’ஜெயிலர்’, 8வது இடத்தில் விஜய்யின் ’லியோ’, 9வது இடத்தில் சல்மான் கானின் ’டைகர் 3’ மற்றும் 10வது இடத்தில் விஜய்யின் ’வாரிசு’ படம் இடம்பிடித்துள்ளது.
SHARE