Saturday 23 December 2023

எத்தனை சட்டம் இயற்றினாலும் அதை அரச அதிகாரிகள்  நடைமுறைப்படுத்துவதில்லை  -  உமாச்சந்திரா பிரகாஷ் குற்றச்சாட்டு..!!!

SHARE

நாட்டில் எத்தனை சட்டம் இயற்றினாலும் அதனை அரச அதிகாரிகள் நடைமுறைப்படுத்துவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் ஒருங்கிணைப்புச் செயலாளர் உமாச்சந்திரா பிரகாஷ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தேர்தல்கள் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நியாயமாகவும் இடம்பெறுவதிலும் அரசியல்வாதிகளின் நலனோம்புகளை பேணுவதிலும் தேர்தல் செலவு மற்றும் என்ற அம்சம் தொடர்பான. கலந்துரையாடல் அண்மையில் யாழ்ப்பாணத்தில் தனியார் விடுதியில் இடம்பெற்றது.

WESTMINISTER FOUNDATION FOR DEMOCRACY அமைப்பு இது தொடர்பான ஆய்வுகளை நடாத்தி வரும் நிலையில் இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், மற்றும் தேர்தல் திணைக்கள அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டு தேர்தல் செலவீனங்கள் தொடர்பான கருத்துக்களை முன் வைத்தனர்.
இக் கலந்துரையாடலில் அவர் மேலும் தெரிவிக்கையில்

தேர்தல் பிரச்சார சட்டம் உருவாக்கப்படல் வேண்டும். அனைத்து தேர்தல்களிலும் பெண்களுக்கு ஆகக் குறைந்தது 25% ஒதுக்கீடு வழங்கப் பட வேண்டும். தேர்தல் வரும் போது அதிகளவில் சுயேட்சைக் குழுக்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.இவர்களை புலம்பெயர் அமைப்புக்கள் தனியார் நிறுவனங்கள் திட்டமிட்டு இறக்குகின்றனர்.அவர்கள் தேர்தல் முடிந்த பின் காணாமல் போய் விடுகின்றனர் இவர்கள் வாக்குகளை சிதறடிக்கச் செய்வதற்காக இவ்வாறு செயற்படுகிறனர். இவற்றிற்கு பொறுப்பு மிக்க வகிபாகம் தொடர்பில் புதிய சட்டம் தேவை.

எத்தனை சட்டம் இயற்றினாலும் அதனை நடைமுறைபப்படுத்தாதிருப்பது அதிகாரிகளின் அசமந்தப் போக்கு என்பேன்.

யாழ்ப்பாணம் தேர்தல் திணைக்களத்தில் கடந்த தேர்தலில் முறைப்பாடு கொடுத்தேன்.வாக்களிப்பு நிலையத்தில் மூன்று வேட்பாளரின் பெயர் இலக்கத்துடனான பேனா வழகைப்பட்டிருந்தமையினை ஆதாரத்துடன் கையளித்திருந்தேன். அவர்களில் இருவர் இப்போ பாராளுமன்ற உறுப்பினர்கள் அன்று கொடுத்த முறைப்பாட்டிற்கு இன்று வரை பதில் இல்லை.

இந்த முறைப்பாடு எல்லாம் தேர்தல் காலத்தில் தான் நடக்கின்றதா? அதன் பின்னான தொடர் செயற்பாடு என்ன என்பது எந்த நடவடிக்கையும் இல்லை. என்றார்

யாழ்.தர்மினி

SHARE