Thursday, 21 December 2023

இரட்டை குழந்தைகளை பெற்ற தாய் 9 நாட்களில் தலைமறைவு..!!!

SHARE


இரட்டை குழந்தைகளை பெற்ற தாய் குழந்தைகள் பிறந்து ஒன்பது நாட்களில் கடிதம் எழுதி தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு தப்பிச் சென்றவர் காலி, அஹுங்கல்ல பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடைய பெண்ணாவார்.

இவர் திருமணமாகி 6 வருடங்களுக்கு பின்னரே இந்தக் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.

இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்ததால் உடல் பலவீனமடைந்த நிலையில் சில நாட்களாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அண்மையில் வீடு திரும்பியுள்ளார்.

இவர் வீட்டை விட்டு தப்பிச்செல்லும் போது கையடக்கத் தொலைபேசியை மாத்திரமே எடுத்துச் சென்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த கடிதத்தில் தன்னால் இந்த வலியை தாங்கிக் கொள்ள முடியாது எனவும் தான் வீட்டை விட்டு செல்வதாகவும் குழந்தைகளை பாதுகாப்பாக பராமரிக்குமாறும் கூறியுள்ளார்.

இரட்டை குழந்தைகளை பராமரிக்க தாய் அவசியம் என்பதால் இவர் தொடர்பில் தகவல் கிடைத்தால் உடனடியாக தெரிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
SHARE