Wednesday, 20 December 2023

முல்லைத்தீவு மாவட்டத்தில் கனமழையால் 6 ஆயிரம் பேர் பாதிப்பு..!!!

SHARE

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற கனமழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் 2,113 குடும்பங்களை சேர்ந்த 6,268 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 176 குடும்பங்களை சேர்ந்த 524 பேர் இடைத்தங்கல் முகாம்களின் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினால் வெளியிடப்பட்ட தகவல் அடிப்படையில் இன்று புதன்கிழமை (20) காலை 9.30 மணி வரையான தகவல் அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவிலே அம்பாள்புரம், கரும்புள்ளியான், ஒட்டறுத்தகுளம், நட்டாங்கண்டல், பாண்டியன்குளம், செல்வபுரம், பாலிநகர், சிராட்டிகுளம், சிவபுரம், மூன்றுமுறிப்பு, பூவரசங்குளம், விநாயகபுரம் ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்த 333 குடும்பங்களை சேர்ந்த 1,076 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோன்று ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் மாங்குளம், பனிக்கன்குளம், பண்டாரவன்னி,கருவேலன்கண்டல், இந்துபுரம், தட்டையர்மலை, புளியங்குளம், தச்சடம்பன், கூழாமுறிப்பு, கனகரத்தினபுரம், காதலியார்சமணங்குளம், பழம்பாசி, தண்டுவான், ஒட்டுசுட்டான், பேராறு, மணவாளன்பட்டமுறிப்பு, கணேசபுரம், முத்துவிநாயகபுரம் ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்த 592 குடும்பங்களை சேர்ந்த 1,748 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோன்று கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கள்ளப்பாடு, சிலாவத்தை, செல்வபுரம், வற்றாப்பளை, தண்ணிமுறிப்பு, முள்ளியவளை தெற்கு, கள்ளப்பாடு வடக்கு, கள்ளப்பாடு தெற்கு, கொக்கிளாய் வடக்கு கொக்குத்தொடுவாய் வடக்கு, செம்மலை, தண்ணீறூற்று, கணுக்கேணி மேற்கு, அளம்பில் வடக்கு, மாமூலை,அம்பலவன் பொக்கணை,வண்ணாங்குளம், குமாரபுரம், முள்ளியவளை தெற்கு, முள்ளியவளை மேற்கு, அளம்பில் தெற்கு, உப்புமாவெளி ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்த 450 குடும்பங்களை சேர்ந்த 1,366 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோன்று துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில் அணிஞ்சியன்குளம், உயிலங்குளம், தென்னியங்குளம், கோட்டைகட்டிய குளம், ஆலங்குளம், தேராங்கண்டல், கல்விளான், மல்லாவி, யோகபுரம் கிழக்கு, புகழேந்திநகர், பாரதிநகர், யோகபுரம் மேற்கு, அம்பலப்பெருமாள்குளம், அமைதிபுரம், புத்துவெட்டுவான், பழையமுறிகண்டி, ஐயன்கன்குளம், துணுக்காய், யோகபுரம் மத்தி, திருநகர் ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்த 251 குடும்பங்களை சேர்ந்த 765 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோன்று புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் புதுக்குடியிருப்பு மேற்கு, தேவிபுரம், மாணிக்கபுரம், உடையார்கட்டு வடக்கு, உடையார்கட்டு தெற்கு மற்றும் வள்ளிபுனம் மன்னாகண்டல் ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்த 472 குடும்பங்களை சேர்ந்த 1,277 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோன்று வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவில் 15 குடும்பங்களை சேர்ந்த 36 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்தவகையிலே மொத்தமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் 2113 குடும்பங்களை சேர்ந்த 6268 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் 7 இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அனர்த்த நிலைமை ஓரளவு குறைந்து வருகின்ற நிலையில் தற்போது 2 இடைத்தங்கல் முகாம்களில் 176 குடும்பங்களை சேர்ந்த 524 பேர் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு பிரதேச செயலாளர்கள், பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவு ஊழியர்கள், பிரதேச சபை ஊழியர்கள், சுகாதார ஊழியர்கள், இராணுவத்தினர், கிராம அலுவலர்கள், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டவர்கள் மக்களுக்கான சமைத்த உணவு மற்றும் அத்தியாவசிய தேவைகளை ஏற்பாடு செய்து வழங்கி வருகின்றனர்.
SHARE