Friday 22 December 2023

முகப்புத்தக விளம்பரத்திற்கு 478,545 டொலர் செலவு..!!!

SHARE


இலங்கையில் கடந்த 2020 ஆம் ஆண்டு தேர்தலில் முகப்புத்தக விளம்பரத்திற்காக 478,545 டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

இலங்கையில் தேர்தல்கள் சுதந்திரமாகவும் நியாயமாகவும் இடம்பெறுவதிலும் அரசியல்வாதிகளின் நலனோம்புகளை பேணுவதிலும் ‘தேர்தல் செலவு’ மற்றும் ‘அரசியல் செலவு‘ ஆகிய அம்சங்கள் மிகவும்

முக்கியமானதாகும்.அந்த வகையில்ல ‘WESTMINISTER FOUNDATION FOR DEMOCRACY’ அமைப்பு இது தொடர்பான ஆய்வுகளை அண்மையில் இலங்கையில் மேற்கொண்டு வருகின்றது. குறித்த ஆய்வின் ஊடாக “இலங்கையில் கடந்த 2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில், முகப்பு புத்தக 26,700 விளம்பரங்களுக்காக (facebook advertising) $ 478,545 டொலர் தொகை செலவிடப்பட்டுள்ளதாக ஆதாரபூர்வமாக கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆய்வில் ஏனைய விளம்பரங்களுக்கான செலவுகளை ஆதாரங்களுடன் கணக்கிடமுடியவில்லை என்றும் முகநூலில் வெளிவந்தவற்றை வைத்தே இக் கணக்கெடுப்பு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறித்த ஆய்வு தொடர்பான கலந்துரையாடலில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த உள்ளூராட்சி சபைப் பிரதிநிதிகள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்தல் ஆணையாளர் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

யாழ்.தர்மினி


SHARE