Wednesday, 20 December 2023

யாழில். பிறந்து 4 நாட்களான குழந்தை உயிரிழப்பு..!!!

SHARE


யாழ்ப்பாணத்தில் பிறந்து நான்கு நாட்களேயானா குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.

குழந்தையின் உயிரிழப்புக்கு காரணம் தெரியாத நிலையில் ,குழந்தையின் உடற்கூற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது .

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் மருத்துவ மனையில் கடந்த 14ஆம் திகதி பெண்ணொருவர் குழந்தை பிரசவித்துள்ளார். இரண்டு நாட்களின் பின்னர் 16ஆம் திகதி வைத்தியசாலையில் இருந்து தாயும் பிள்ளையும் வீடு திரும்பினர்.

அந்நிலையில் 18ஆம் திகதி திங்கட்கிழமை வீட்டில் குழந்தையின் உடல் சிகப்பு நிறமாக மாறியதை அடுத்து , பெற்றோர் குழந்தையை தனியார் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது , அவர்கள் குழந்தையை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்க கூறியுள்ளனர்.

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.
SHARE