Friday, 22 December 2023

இன்றைய ராசிபலன் - 22.12.2023..!!!

SHARE

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பாக செயல்படக்கூடிய நாளாக இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். மேலதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். வாகனங்களில் செல்லும்போது கூடுதல் கவனம் இருக்கட்டும். ஹெல்மெட் போடாமல், ஹெட்போன் போட்டுக் கொண்டு வாகனம் ஓட்ட வேண்டாம். கூடுமானவரை அடுத்தவர்களை கை நீட்டி புறம் பேசும் பழக்கத்தை குறைத்துக் கொள்ளுங்கள் நல்லது நடக்கும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று புத்தி கூர்மை உள்ள நாளாக அமையும். எந்த பிரச்சனை வந்தாலும் அதை திறமையாக சமாளித்துக் கொள்வீர்கள். எதிரிகளை வீழ்த்துவீர்கள். கணவன் மனைவிக்கடையை ஒற்றுமை அதிகரிக்கும். பெற்றவர்களின் ஆசீர்வாதத்தை பெறுவீர்கள். அரசாங்கம் சம்பந்தப்பட்ட வேலைகள் சுலபமாக முடியும். கோர்ட் வெட்கேஸ் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கக்கூடிய நாளாக அமையும். நீண்ட நாள் முயற்சி செய்த காரியங்கள் இன்று வெற்றி அடையும். அதனால் மன மகிழ்ச்சியும் அடைவீர்கள். குடும்பத்தோடு வெளியிடங்களுக்கு சென்று நேரத்தை கழிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். இன்று மாலை சுப செலவுகள் ஏற்படும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுபகாரியப் பேச்சுகள் மீண்டும் தொடங்கும். பிரிந்து இருந்த கணவன் மனைவி ஒன்று சேர வாய்ப்பு உள்ளது.

கடகம்


கடக ராசிக்காரர்கள் இன்று வெளிப்படையாக பேசணும். யாரிடமாவது மனம் வருந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றால் கேட்டு விடுங்கள். மனதிற்குள்ளேயே பிரச்சனையை போட்டு அழுத்திக் கொள்ள வேண்டாம். கணவன் மனைவி இடையே சின்ன சின்ன சண்டைகள் வந்து போகும். வேலை செய்யும் இடத்தில் மூன்றாவது நபரால் பிரச்சனை வரும். கொஞ்சம் சமாளித்துக் கொள்ளுங்கள். நேர்மையை சோதிக்கும் சில பிரச்சனைகளும் வரலாம். கவலைப்படாதீங்க பொய் சொல்லாதீங்க.

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கும். அதே சமயம் ஏமாற்றமும் இருக்கும். எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொண்டால் இன்று உங்களுக்கான ஏமாற்றம் இருக்காது. இன்றைக்கான வேலையை சகஜமாக செய்யுங்கள். பெரிய அளவில் புதிய முயற்சிகளும் வேண்டாம். செய்யக்கூடிய வேலையில் அலட்சியமும் வேண்டாம். உங்களுடைய பேச்சை குறைத்துக் கொள்ளவும். சோம்பேறித்தனத்தை ஒதுக்கி வைக்கவும். எப்போதும் மனது உற்சாகமாக இருக்க பிடித்த கடவுளின் நாமத்தை சொல்லுங்கள்.

கன்னி


கன்னி ராசிக்காரர்கள் இன்று பொறுமையோடு நடந்து கொள்ள வேண்டும். அவசரப்படக்கூடாது, பெரியவர்களின் ஆலோசனையை காது கொடுத்து கேட்க வேண்டும். அடுத்தவர்களை மதிப்பு இல்லாமல் பேசக்கூடாது. மேலதிகாரிகளிடம் கவனத்தோடு இருங்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய முதலீட்டை செய்யும் போது மட்டும் கொஞ்சம் கூடுதல் கவனம் இருக்கட்டும். பெரிய அளவில் கடன் வாங்க வேண்டாம்.

துலாம்


துலாம் ராசிக்காரர்கள் இன்று உஷாராக இருக்க வேண்டும். நீங்கள் யாரிடமாவது ஏமாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. பேருந்தில் பயணம் செய்பவர்கள் ஷேர் ஆட்டோவில் பயணம் செய்பவர்கள் எல்லோரும் அவரவர் உடைமையை கொஞ்சம் ஜாக்கிரதையாக வைத்துக் கொள்ளுங்கள். பயணத்தின் போது கூடுதல் கவனம் தேவை. பாவப்பட்டு இன்று யாருக்கும் உதவி செய்யாதீர்கள். முன்பின் தெரியாதவர்கள் உங்களிடம் வந்து பேசினால் அதை தவிர்த்துக் கொள்ளவும்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று ஏற்ற இறக்கங்கள் நிறைந்த நாளாக இருக்கும். தோல்வியை கண்டு கவலைப்படாதீங்க. வெற்றியை கண்டு ரொம்பவும் மனமகிழ்ச்சி அடைய வேண்டாம். சாதாரணமாக இருங்கள். உங்களுடைய வேலைகளை சாதாரணமாக செய்யுங்கள். இன்றைய நாள் அப்படியே கடந்து செல்லட்டும். ரொம்ப பிடித்தவர்கள் கிட்ட ரொம்ப நெருங்கியும் போக வேண்டாம். பிடிக்காதவர்களிடம் ரொம்பவும் ஒதுங்கியும் இருக்க வேண்டாம். தாமரை இலையில் தண்ணீர் போல இன்றைய நாளை கடந்து செல்லவும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று உடல் சோர்வு இருக்கும். வேலை பளு அதிகமாக இருக்கும். கொஞ்ச நேரம் தூங்கினால் நல்லது என்று சிந்திப்பீர்கள். ஆனால் உட்கார கூட நேரம் இருக்காது. வீட்டில் இருக்கும் பெண்களுக்கு வீட்டு வேலை இரட்டிப்பாக அதிகரிக்கும். விருந்தாளிகளின் வருகை இருக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். உங்களுடைய குழந்தைகளின் ஆரோக்கியத்திலும் அக்கறை காட்டவும்.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் கூடுதல் செலவு இருக்கும். கையில் இருக்கும் சேமிப்பு கரைய வாய்ப்புகள் உள்ளது. வியாபாரத்தில் அதிக கவனம் செலுத்துங்கள். முதலீடு செய்தால் மட்டும் போதாது. முதலாளி அமர்ந்து கணக்கு வழக்குகளை பார்த்தால் தான் நல்லது நடக்கும். சந்தேகத்திற்குரிய நபரை உங்கள் நட்பு பட்டியலில் இருந்து நீக்கி விடுங்கள். குடும்ப விஷயத்தை வெளிநவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல வாய்ப்புகள் வீடு தேடி வரும். எந்த வாய்ப்பை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற குழப்பம் உங்களுக்குள் இருக்கும். அவசரப்பட்டு இருக்கிற வேலையை விட வேண்டாம். புதிய வேலை கிடைப்பது இன்றைய சூழ்நிலையில் குதிரைக்கொம்பாக இருக்கிறது. வாழ்க்கை துணை பேச்சு கேட்டு நடக்கவும். முன்கோபம் பட வேண்டாம். பெண் பிள்ளைகளால் மனது மகிழ்ச்சி அடையும். வாகனம் ஓட்டும் போது கொஞ்சம் கவனம் இருக்கட்டும்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று வீண் வம்பு வீடு தேடி வரும். நீங்கள் சிவனே என்று இருந்தால் கூட உங்களை வம்புக்கு இழுக்க நாலு பேர் வருவாங்க. ஆனால் நீங்கள் தான் உஷாரா இருந்துக்கணும். வம்பு சண்டைக்கும் போகக்கூடாது. உங்களை தேடி வரும் சண்டைக்கும் போகக்கூடாது. அமைதியாக இருந்து கொள்ளுங்கள். எதிரிகளைக் கண்டால் நீங்கள் தான் விலகி செல்ல வேண்டும். எதிரிகள் உங்களை நெருங்கி வீழ்த்த பார்ப்பார்கள். இன்று மனபலமும், கொஞ்சம் தைரியமும் உங்களுக்கு தேவைப்படும் பாத்துக்கோங்க.
SHARE