Thursday, 21 December 2023

இன்றைய ராசிபலன் - 21.12.2023..!!!

SHARE

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றிக்கான நாளாக இருக்கும். புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். வியாபாரத்தை விரிவு படுத்தலாம். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த பிரச்சனைகள் ஒரு முடிவுக்கு வரும். வாகனங்களில் செல்லும்போது கூடுதல் கவனம் இருக்கட்டும். ஹெல்மெட் போடாமல் வண்டி ஓட்டாதீங்க. ஹெட்போன் போட்டுக்கிட்டு வண்டி ஓட்டாதீர்கள்.

ரிஷபம்


ரிஷப ராசி காரர்களுக்கு இன்று கூடுதல் பொறுப்பு இருக்க வேண்டும். அலட்சியமாக ஏதாவது ஒரு வேலையை செய்தால் பிரச்சனை வந்துவிடும். மேலதிகாரிகளிடம் திட்டு வாங்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். ஜாக்கிரதை பெரியவர்களை எதிர்த்து பேச வேண்டாம். உங்களுக்கு யாராவது அறிவுரை கூறினால் அதை காது கொடுத்து கேளுங்கள். இன்று அடம் பிடித்து நீங்கள் எந்த காரியத்தையும் சாதிக்கக்கூடாது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று மனநிறைவான நாளாக இருக்கும். உங்களை வேண்டவே வேண்டாம் என்று ஒதுக்கி வைத்தவர்கள் கூட தானாக உங்கள் வீடு தேடி வருவார்கள். பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். குறிப்பாக கணவன் மனைவிக்குள் இருந்து வந்த பிரச்சனை ஒரு முடிவுக்கு வரும். குடும்பத்தில் சந்தோஷம் நிறைவாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட சில நல்ல விஷயங்கள் நடக்கும்.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று வேலை பளு கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும். நேரத்தை அனாவசியமாக செலவு செய்யாமல் கரெக்டாக பிளான் பண்ணி ஒர்க் பண்ணா எல்லா வேலைகளையும் முடித்து விடுவீர்கள். கொஞ்சம் சோம்பேறித்தனம் பட்டால் இந்த நாள் இறுதியில் எல்லா வேலைகளும் மூட்டை போல ஒன்றாக சேர்ந்து விடும். மொத்தமா சுமப்பதில் கஷ்டம் இருக்கும் ஜாக்கிரதை.

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தொடக்கம் கொஞ்சம் சுமாராக இருந்தாலும், மதிய நேரத்திற்கு மேல் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். எல்லா வேலையையும் முடித்துவிட்டு நிம்மதியாக ஓய்வு எடுக்க வேண்டும் என்பதற்காக பம்பரம் போல சுழன்று வேலை பார்ப்பீங்க. சிக்கல் வரக்கூடிய பிரச்சினையாக இருந்தாலும் அதை சுலபமாக சமாளித்துக் கொள்வீர்கள். தாய்மாமன் வழி உறவால் ஆதரவு கிடைக்கும். சொத்து பிரச்சனை ஒரு முடிவுக்கு வரும்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று ஆதரவு நிறைந்த நாளாக இருக்கும். பல வகையில் பிரச்சனைகள் சூழ்ந்தாலும், பிரச்சனையில் இருந்து வெளிவர மனைவி குழந்தைகள் உற்றார் உறவினர்கள் எல்லோரும் உங்களுக்கு ஆதரவு கொடுப்பார்கள். அதனால் கவலை இருக்காது. உறவுகளின் மதிப்பையும் நண்பர்களின் மதிப்பையும் தெரிந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு கிடைக்கும். இனிமே யாரையும் உதாசீனப்படுத்தி பேசாதீங்க.

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று திறமைகள் வெளிப்படும் நாளாக அமையும். உயர் பதவியில் உள்ளவர்களிடம் சுமூகமான உறவு காணப்படும். உங்களுடைய மனதில் பதவி உயர்வு சம்பள உயர்வு பற்றிய நினைப்பு இருந்தால் அந்த பேச்சு வார்த்தைகளை நடத்தலாம். நிச்சயம் நல்லது நடக்கும். பெயர் புகழ் அந்தஸ்து உங்களை தேடி வரும். மதிப்பும் மரியாதையும் உயர்ந்து விட்டால் அதை நிலை நிறுத்திக் கொள்ள நீங்கள் கொஞ்சம் உழைக்க வேண்டியதாக இருக்கும்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் பொறுமையாக நடந்து கொள்ள வேண்டும். வாழ்க்கை துணையிடம் வாக்குவாதம் சண்டை செய்யக் கூடாது. நிதி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரும். கொடுக்கல் வாங்கலில் சிக்கல் இருக்கும். யாரை நம்பியும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க. நகை அடமானம் வைக்காதீங்க. வீட்டில் பெற்றவர்களை அக்கறையோடு பார்த்துக் கொள்ள வேண்டும். அவர்கள் மனம் நோகும்படி நடந்து கொள்ளக் கூடாது.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று செலவு நிறைந்த நாளாக இருக்கும். சுப செலவுகள் ஏற்படும். நெருங்கிய சொந்தங்களுக்கு சீர் செய்ய வேண்டிய கட்டாயம் சில பேருக்கு இருக்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் படிப்படியாக குறையும். வியாபாரத்தில் பார்ட்னருடன் நல்லுறவு ஏற்படும். வியாபாரத்தை முன்னேற்ற தேவையான புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். பொன் பொருள் சேர்க்க இருக்கும்.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று வரவு நிறைந்த நாளாக இருக்கும். சேமிப்பு இரட்டிப்பாகும். வீட்டில் மனைவிக்கு தேவையான ஆடம்பரப் பொருட்களை பரிசாக வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள். பிள்ளைகளின் மூலம் மனசு சந்தோஷப்படும். அக்கம் பக்கம் வீட்டில் இருப்பவர்களோடு சில பேருக்கு சண்டை வர வாய்ப்பு உள்ளது ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். மூன்றாவது நபரிடம் முழுசா நம்பி எந்த விஷயத்தையும் சொல்லாதீங்க.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று சோம்பேறித்தனமான நாளாக இருக்கும். எந்த விஷயத்தை முதலில் செய்வது என்றே தெரியாது. நிறைய வேலை இருக்கும். ஆனால் அதை செய்ய முடியாமல் தவிப்பீர்கள். வேறு வழி கிடையாது பிரச்சனை வரக்கூடாது, அடுத்த நாள் ஓய்வு எடுக்க வேண்டும், அடுத்த நாள் சரியாக செல்ல வேண்டும் என்றால், இன்று நீங்கள் உழைத்து தான் ஆக வேண்டும். மனதிற்கு பிடித்த பாட்டை கேட்டுகிட்டே வேலை செய்யுங்க மனதை உற்சாகமா வச்சுக்கோங்க.

மீனம்


மீன ராசிக்காரர்கள் இன்று எல்லா விஷயத்திலும் முன்கூட்டியே யோசனை செய்து கொள்ள வேண்டும். யோசனை இல்லாமல் திடீர் என்று ஒரு காரியத்தில் காலை வைக்காதீங்க. புதிய முயற்சிகளை நாளை தள்ளி வைத்துக் கொள்ளுங்கள். அன்றாட வேலையை சரியாக செய்தாலே போதும். முன்கோபம் வேண்டாம். மேலதிகாரிகளை அனுசரித்து செல்லவும். புதிய வேலை தேடும் முயற்சியை இப்போதைக்கு கைவிட்டு விடுங்கள். இருக்கின்ற வேலையை தக்க வைத்துக் கொள்ள பாருங்கள்.
SHARE