Thursday, 21 December 2023

2024 புத்தாண்டு ராசிபலன் - கன்னி..!!!

SHARE


கன்னி ( உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள் )


சூழ்நிலைக்குத் தக்கவாறு தங்களை மாற்றி அமைத்துக் கொள்ளக்கூடிய நற்பண்புகளைக் கொண்ட கன்னி ராசி நேயர்களே! புதனின் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு ஒவ்வொரு செயலிலும் சிறப்பான முடிவுகள் எடுக்கக்கூடிய ஆற்றல் கொண்ட உங்களுக்கு ஒரு ராசியில் நீண்ட காலம் தங்கும் கிரகமான சனி வரும் 2024-ம் ஆண்டு முழுவதும் உங்கள் ராசிக்கு ருண, ரோக ஸ்தானம் என வர்ணிக்கப்படக்கூடிய 6-ல் ஆட்சி பெற்று சஞ்சாரம் செய்வது மிகவும் அற்புதமான அமைப்பாகும். நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். எடுக்கும் முயற்சியில் வெற்றி மேல் வெற்றி உண்டாகும். உங்களின் நீண்ட நாளைய கனவுகள் எல்லாம் வரும் நாட்களில் எளிதில் பூர்த்தியாகும். இருக்கும் இடத்தில் உங்களது மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். கௌரவ பதவிகள் உங்களைத் தேடி வரும். கடந்த கால கடன்கள் எல்லாம் படிப்படியாக குறையும். தொழில், வியாபாரத்தில் சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு.


தொழில், வியாபாரம்:

தொழில் நிமித்தமாக இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறைந்து ஒரு உயர்வான நிலையினை நீங்கள் எட்டுவீர்கள். அரசு வழியில் நீங்கள் எதிர்பார்த்த உத்தரவுகளை வரும் நாட்களில் பெற முடியும். தொழில், வியாபாரம் சிறப்பாக இருக்கும் என்றாலும் கூட்டாளிகளிடம் மனஸ்தாபங்கள் ஏற்படலாம் என்பதால் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது.


உத்தியோகம்:

வேலைக்கு செல்பவர்களுக்கு உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்ல சந்தர்ப்பமும் ஒரு பெரிய நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரக்கூடிய யோகமும் உண்டாகும். விரும்பிய பதவி உயர்வு, கௌரவ பதவிகளை அடையக் கூடிய வாய்ப்புகள் ஏற்படும். உங்கள் மீது இருந்த பழிச் சொற்கள் எல்லாம் தற்போது விலகுவதால் மன நிம்மதியுடன் பணிபுரிய முடியும். அரசு அதிகாரிகளுடைய ஒத்துழைப்பு மிகச் சிறப்பாக இருப்பதால் உடன் வேலை செய்பவர்கள் தந்த தொந்தரவுகள் எல்லாம் தற்போது முழுமையாக குறையும். அசையும், அசையா சொத்துகளில் முதலீடு செய்யக்கூடிய வாய்ப்புகள், மனைவி, பிள்ளைகள் விரும்பியதை வாங்கி தரக்கூடிய அளவுக்கு உங்களின் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கக்கூடிய நிலை ஏற்படும்.

ஆண்டு கோள் என வர்ணிக்கப்படக்கூடிய குரு வரும் 2024-ம் ஆண்டில் முதல் 4 மாதங்கள் உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானமான 8-ம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் முதல் 4 மாத காலங்கள் பண விஷயத்தில் சற்று ஏற்ற, இறக்கமான நிலை இருந்தாலும் உங்கள் தனித்திறமையால் எதையும் சமாளிப்பீர்கள். கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் 2024-ம் ஆண்டில் முதல் 4 மாதங்கள் மட்டும் சற்று கவனத்தோடு இருப்பது நற்பலனை அடைய உதவும்.


குடும்பம்:

வரும் 01-05-2024-க்கு பிறகு உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தனமான 9-ம் வீட்டில் குரு பகவான் சஞ்சாரம் செய்ய இருப்பது மிகவும் உன்னதமான அமைப்பாகும். மே மாதம் முதல் உங்களின் பொருளாதார நிலை மிக மிக நன்றாக இருப்பது மட்டும் இல்லாமல் குடும்பத்தில் மங்கலகரமான சுபகாரியங்கள் கைகூடும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி ஏற்படும். குடும்பத்தில் நல்லது நடக்கவில்லையே என்ற உங்களது மன கவலைகள் விலகி நீண்ட நாளைய கனவுகள் எல்லாம் கை கூடி மகிழ்ச்சி தரும். குடும்ப உறுப்பினர்களும் சமுதாயத்தில் ஒரு நல்ல நிலையை அடைவதால் மன நிம்மதி ஏற்படும். பூர்வீக சொத்து வகையில் அனுகூலமான பலன்களை அடையும் வாய்ப்பு, நீண்ட நாட்களாக இருந்த சொத்து பிரச்சினைகளுக்கு தற்போது தீர்வு ஏற்படக்கூடிய அமைப்புகள் குறிப்பாக பாகப்பிரிவினை ஏற்பட்டு உங்களுக்கு கிடைக்க வேண்டிய சொத்துகள் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் வரும் 2024-ம் ஆண்டில் உண்டு.

நவக்கிரகங்களில் நிழல் கிரகம் என வர்ணிக்கப்படக்கூடிய கேது ஜென்ம ராசியிலும், ராகு உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டிலும் இந்த ஆண்டு முழுவதும் சஞ்சாரம் செய்வதால் ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். கணவன், மனைவியிடையே விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. பேச்சில் பொறுமையோடு இருந்தால் குடும்பத்தில் ஏற்படும் சின்ன சின்ன பிரச்சினைகளை எளிதில் சமாளிக்க முடியும். ஒரு சில நேரங்களில் திடீரென்று உணர்ச்சி வசப்பட்டு விடுவீர்கள். குறிப்பாக ஒவ்வொரு காரியத்திலும் பொறுமையோடு செயல்பட்டால் வளமான பலன்களை பெற முடியும்.


உடல் ஆரோக்கியம்:

தேக ஆரோக்கியம் மிகச் சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். கடந்த காலங்களில் இருந்து வந்த மருத்துவ செலவுகள் எல்லாம் தற்போது குறைந்து சேமிக்கும் அளவிற்கு உங்களின் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும்.

வரும் 2024-ம் ஆண்டில் நீங்கள் ஒரு மிகப்பெரிய ஒரு வளர்ச்சியினை அடைய உள்ளீர்கள் என்றால் மிகையாகாது நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைத்து மனமகிழ்ச்சி ஏற்படும்.
SHARE