Thursday, 21 December 2023

2024 புத்தாண்டு ராசிபலன் - மகரம்..!!!

SHARE


மகரம் ( உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்)


எவ்வளவு சிக்கல்கள் இருந்தாலும் தன்னுடைய லட்சியங்களைத் தவறாமல் நிறைவேற்றக் கூடிய ஆற்றல் கொண்ட மகர ராசி நேயர்களே! சோதனைகள் பல இருந்தாலும் உழைப்பால் உயர்ந்து மற்றவர்களுக்கு உதாரணமாக விளங்கக்கூடிய உங்களுக்கு வரும் 2024-ம் ஆண்டில் முயற்சி ஸ்தானம் என வர்ணிக்கப்படக்கூடிய 3-ம் வீட்டில் ராகு சஞ்சரிப்பதால் எதிலும் துணிச்சலோடு செயல்பட்டு அடைய வேண்டிய இலக்கை அடைவீர்கள். உங்கள் செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். கடந்த கால பிரச்சினைகள் எல்லாம் படிப்படியாக குறைய கூடிய வாய்ப்புகள் உண்டு. வெளியூர் தொடர்புகள் மூலம் ஆதாயங்களை அடைவீர்கள்.

ஆண்டு கோள் என வர்ணிக்கப்படக்கூடிய குரு பகவான் 2024-ம் ஆண்டில் முதல் நான்கு மாத காலங்கள் 4-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பண விஷயத்தில் முதல் நான்கு மாத காலங்கள் சற்று பொறுமையோடும் சிக்கனத்தோடும் செயல்படுவது நல்லது. ஆடம்பரத்தை குறைத்துக் கொண்டு எதிலும் கையிருப்பைக் கொண்டு செலவு செய்வது சிறப்பு. எந்த பிரச்சினையை பற்றியும் கவலைப்படாமல் முதல் நான்கு மாத காலங்கள் நீங்கள் பொறுமையோடு இருந்து விட்டால் வரும் 01-05-2024 முதல் உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ம் வீட்டில் குருபகவான் சஞ்சாரம் செய்ய இருப்பதால் உங்கள் வாழ்வில் மிகப்பெரிய மறுமலர்ச்சி ஏற்படும். உங்களின் பொருளாதார நிலை மிக மிக நன்றாக மாறும்.


தொழில், வியாபாரம்:

தொழில், வியாபாரத்தில் ஆண்டு தொடக்கத்தில் கிடைக்கும் வாய்ப்புகளை நீங்கள் பயன்படுத்திக் கொண்டால் மே மாத முதல் தொழிலில் நல்ல லாபமும் பிறர் பார்த்து ஆச்சரியப்படும் அளவிற்கு ஒரு உயர்வான நிலையும் எட்டுவீர்கள். உங்களுக்கு இருந்த போட்டி பொறாமைகள் எல்லாம் விலகி சமுதாயத்தில் ஒரு நல்ல நிலையை அடைய முடியும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இல்லாவிட்டாலும் தொழிலில் படிப்படியான வளர்ச்சி கிடைக்கும்.


உத்தியோகம்:

உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகாரியிடம் வாக்குவாதங்கள் செய்யாமல் உங்கள் பணியில் மட்டும் நீங்கள் சற்று கவனத்தோடு இருந்தால் கௌரவமான நிலையினை எட்ட முடியும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். வேலைப்பளு இருந்தாலும் அதற்கான ஆதாயங்கள் கிடைக்கும். சிலருக்கு விரும்பிய இடம் மாற்றங்கள் கிடைத்து வெளியூர் செல்லக்கூடிய வாய்ப்புகள் அமையும்.


குடும்பம்:

குடும்பத்தில் மங்கலகரமான சுபகாரியங்கள் கை கூடும். பூர்வீக சொத்து வகையில் நீண்ட நாட்களாக தீராமல் இருந்த பிரச்சினைக்கெல்லாம் ஒரு நல்ல முடிவு கிடைக்கும். நீண்ட நாட்களாக குழந்தை இல்லை என்று ஏங்கியவர்களுக்கு அழகிய குழந்தைகளை பெற்றெடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். பண வரவுகள் சிறப்பாக இருந்து அனைத்து விதமான தேவைகளும் பூர்த்தியாவது மட்டும் இல்லாமல் கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்ற முடியும். கடன் பிரச்சினைகள் குறையும். மனைவி, பிள்ளைகள் விரும்பியதை வாங்கித் தர முடியும்.

பேச்சால் வீண் பிரச்சினைகள் ஏற்படக்கூடிய நேரம் என்பதால் முடிந்த வரை பேச்சை குறைத்துக் கொள்வது, கணவன், மனைவியிடையே விட்டுக் கொடுத்து செல்வது உத்தமம். ஏழரைச்சனியில் பாதச்சனி நடப்பதால் ஒரு சில நெருக்கடிகள் இருக்கும் என்றாலும் ராகு மற்றும் குரு சஞ்சாரத்தால் எதையும் எதிர்கொள்ள கூடிய பலம் உங்களுக்கு உண்டாகும். அதிக முதலீடுகள் கொண்ட செயல்களில் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செயல்படுவது மிகவும் நல்லது.


உடல் ஆரோக்கியம்:

உங்கள் ராசியாதிபதி சனி பகவான் இந்த ஆண்டு முழுவதும் உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் உங்களது உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது, குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் தருவது நல்லது.
SHARE