2024 புத்தாண்டு ராசிபலன் - மேஷம்..!!!
மேஷம் ( அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் )
எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் திறம்பட செயல்பட்டு வெற்றி பெறக் கூடிய ஆற்றல் கொண்ட மேஷ ராசி நேயர்களே! செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் இயற்கையிலேயே மற்றவர்களை வழி நடத்துவதில் வல்லவராக இருப்பீர்கள். உங்கள் ராசிக்கு 10, 11-க்கு அதிபதியான சனி வரும் 2024-ம் ஆண்டு முழுவதும் லாப ஸ்தானமான 11-ல் ஆட்சி பெற்று சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பாகும். சர்ப்ப கிரகமான கேது உங்கள் ராசிக்கு ருண, ரோக ஸ்தானமான 6-ல் வலுவாக சஞ்சரிப்பது மேலும் உங்கள் பலத்தை அதிகரிக்கக்கூடிய ஒரு நல்ல அமைப்பாகும். சகல சௌபாக்கியங்களையும் அடையும் அதிர்ஷ்டங்கள் உண்டு. உங்களுடைய நீண்ட நாளைய எண்ணங்கள் எல்லாம் வரும் நாட்களில் நிறைவேற கூடிய ஒரு வாய்ப்புகள் இருக்கிறது. ஆண்டு கோள் என வர்ணிக்கப்படக்கூடிய குரு ஆண்டு தொடக்கத்தில் ஜென்ம ராசியில் சஞ்சரித்து 5, 7, 9 ஆகிய ஸ்தானங்களை பார்வை செய்வது அற்புதமான அமைப்பாகும். பூர்வீக சொத்து வகையில் நீண்ட நாட்களாக தீர்க்க முடியாமல் இருந்து வந்த பிரச்சினைக்கெல்லாம் தற்போது ஒரு முடிவு கிடைக்கும். பங்காளி இடமிருந்து வந்த கருத்து வேறுபாடுகள் எல்லாம் விலகும். திருமண வயதை அடைந்த ஆண், பெண்களுக்கு விரும்பிய வரன் கிடைத்து மனமகிழ்ச்சி ஏற்படும். பெரியோர்களுடைய ஆசி சிறப்பாக கிடைத்து நீண்ட நாட்களாக உங்களுக்கு இருக்கக்கூடிய மனக்கவலைகள் எல்லாம் குறையும்.
அதிலும் குறிப்பாக 01-05-2024 முதல் குரு 2-ல் சஞ்சாரம் செய்ய இருப்பது மிகவும் உன்னதமான அமைப்பாகும். கொடுக்கல், வாங்கல் ரீதியாக எதிர்பாராத அதிர்ஷ்டத்தை அடைய கூடிய அமைப்புகள், குடும்பத்தில் மகிழ்ச்சியை ஏற்படும். பிறருக்கு தந்த வாக்குறுதிகளை குறித்த நேரத்தில் காப்பாற்றக்கூடிய ஒரு பலம் உண்டாகும்.
தொழில், வியாபாரம்:
தொழில், வியாபாரத்தில் நீங்கள் நினைத்ததை நிறைவேற்ற முடியும். சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் நல்ல லாபத்தை ஈட்டக் கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் வளர்ச்சிக்காக நவீன கருவிகளை வாங்கக்கூடிய அதிர்ஷ்டங்கள் ஏற்படும். திறமை வாய்ந்த வேலை ஆட்கள் உங்கள் தொழிலில் இணைவார்கள். அரசு வழியில் நீங்கள் எதிர்பார்த்த உத்தரவுகளை வரும் நாட்களில் பெறக்கூடிய ஒரு அதிர்ஷ்டங்கள் உண்டு. உங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் கூட தற்போது உங்களின் நல்ல பண்பை புரிந்து கொண்டு நட்புடன் பழகக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். தொழில் நிமித்தமாக இருந்து வந்த மறைமுக போட்டிகள் இருந்த இடம் தெரியாமல் மறையும். கடந்த காலங்களில் நீங்கள் பட்ட கஷ்டத்துக்கு எல்லாம் வரும் நாட்களில் விடிவுகாலம் பிறக்கும். நீண்ட நாட்களாக உங்களுக்கு வரவேண்டிய மற்றவர்களுக்கு கொடுத்த பணம் எல்லாம் தற்போது வந்தடைந்து உங்களது வாழ்க்கை தரம் உயரும்.
உத்தியோகம்:
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிலும் திறமையோடு செயல்படக்கூடிய ஒரு அதிர்ஷ்டங்கள் ஏற்படும். உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். அதிகாரிகளுடைய ஒத்துழைப்பானது சிறப்பாக இருப்பது மட்டும் இல்லாமல் உங்களுக்கு பிரச்சினை தந்த அதிகாரிகள் இடம் மாறி மற்ற இடத்திற்கு செல்வதால் நீங்கள் நிம்மதியுடன் பணி புரிய முடியும். நீங்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கக்கூடிய ஒரு அதிர்ஷ்டமும் விரும்பிய இடம் மாற்றங்கள் கிடைத்து குடும்பத்துடன் இணையக்கூடிய வாய்ப்புகளும் வரும் நாட்களில் ஏற்படும். ஒரு சிலருக்கு வெளியூர், வெளிநாடு தொடர்புகள் மூலமாக பொருளாதார ஆதாயத்தை பெற முடியும்.
குடும்பம்:
குடும்ப ஒற்றுமையானது மிகச் சிறப்பாக இருந்து கணவன், மனைவியிடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் வழியில் மன மகிழ்ச்சி ஏற்படக்கூடிய நிகழ்வுகள் நடக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். பணவரவுகள் மிக மிக நன்றாக இருந்து உங்களுக்கு உள்ள கடந்த கால கடன் பிரச்சினைகள் எல்லாம் படிப்படியாக குறைந்து மன நிம்மதி ஏற்படும்.
உடல் ஆரோக்கியம்:
கடந்த காலங்களில் உங்களுக்கு குடும்பத்தில் இருந்து வந்த வீண் மருத்துவ செலவு எல்லாம் தற்போது குறைந்து ஒரு நிம்மதியான நிலை வரும் நாட்களில் ஏற்படும். 2024-ம் ஆண்டில் உங்களுக்கு சகல சௌபாக்கியங்களும் ஏற்படுத்தக்கூடிய ஒரு சிறப்பான ஆண்டாக இருக்கும் என்பதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை.