புத்தாண்டு ராசி பலன் 2024: புது வசந்தம்.. தொட்டதெல்லாம் பொன்னாகும் அதிர்ஷ்டசாலிகள் யார்?
2024 ஆம் ஆண்டு இன்னும் சில நாட்களில் பிறக்கப்போகிறது. புத்தாண்டில் புது வசந்தம் பிறக்குமா என்று பலரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். யாருக்கெல்லாம் 2024ஆம் லாபத்தை அள்ளித்தரக்கூடிய பொற்காலமான ஆண்டாக அமையப்போகிறது என்று பார்க்கலாம்.
மேஷம்: லாபங்கள் நிறைந்த ஆண்டாக மேஷ ராசிக்காரர்களுக்கு அமைந்துள்ளது. வேலை செய்யும் இடத்தில் புரமோசனும் சம்பள உயர்வும் கிடைக்கும். 2024ஆம் ஆண்டு பொற்கால ஆண்டாக அமையப்போகிறது. உற்சாகமாக மன மகிழ்ச்சியோடு புத்தாண்டினை வரவேற்க தயாராகுங்கள்.
ரிஷபம்: ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது என்று ரிஷப ராசிக்காரர்கள் பாடப்போகிறீர்கள் இந்த ஆண்டு பொருளாதார வளர்ச்சி அதி அற்புதமாக இருக்கும். நிதி நெருக்கடிகள் விலகும். கடன்கள் குறையும். சினிமா ஊடகத்துறையில் இருப்பவர்களுக்கு அதி அற்புதமான ஆண்டாக அமையும். 2024ஆம் ஆண்டில் உங்கள் வாழ்க்கையில் அற்புதங்கள் நடக்கப்போகிறது.
தொட்டது துலங்கும் வெற்றிகள் தேடி வரும்.
மிதுனம்: 2024ஆம் ஆண்டில் உங்களுக்கு நவ கிரகங்களும் சாதகமான நிலையில் பயணம் செய்வதால் தடைகள் எல்லாம் தகர்ந்து விடும். எந்த பிரச்சினை வந்தாலும் எளிதில் கடந்து விடுவீர்கள். நன்மைகள் அதிகம் நடக்கும். வேலைக்காக செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வியாபாரம் தொழிலில் லாபம் அதிகரிக்கும்.
கடகம்: சந்திரனை ராசி நாதனாகக் கொண்ட கடகம் ராசிக்காரர்களே. சனிபகவான் அஷ்டம சனியாக பயணம் செய்கிறார். லாப வீட்டில் குருபகவான் அமர்கிறார். நினைத்த காரியம் நிறைவேறும். உடல் நலத்தில் கவனம் தேவை. உடம்புக்குள் இருந்த நோய்கள் வெளிப்பட்டு குணமடையும். மருத்துவ செலவுகள் குறையும் 2024ஆம் ஆண்டில் சவால்களை சமாளிப்பீர்கள். கடன் பிரச்சினையில் மாட்டிக்கொள்ளாதீர்கள்.
சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு 2024ஆம் ஆண்டு அதி அற்புதமான ஆண்டாக அமையப்போகிறது. வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும் என்று பாடுவீர்கள். வருடம் முழுக்க உற்சாகமாக இருப்பீர்கள். புதிய வேலை கிடைக்கும். தொழில் வியாபாரம் தொடங்க முயற்சி செய்வீர்கள். கடன்கள் தீரும். பண வருமானம் அதிகரிக்கும் வங்கியில் சேமிப்பு உயரும்.
கன்னி: 2024ஆம் ஆண்டு உங்களுடைய கஷ்டங்கள் கவலைகள் குறையப்போகிறது. ஒன்பதாம் வீட்டில் அமரப்போகும் குருவின் பார்வை உங்களுக்கு கிடைக்கப்போகிறது. கை நிறைய சம்பளத்தில் நல்ல வேலை கிடைக்கும். புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். வெளிநாடு செல்வதற்கான யோகங்கள் கை கூடி வரப்போகிறது. இந்த ஆண்டு அதிகம் சம்பாதிக்கலாம். 2024ஆம் ஆண்டு பொருளாதார வளம் நிறைந்த ஆண்டாக கன்னி ராசிக்காரர்களுக்கு அமையப்போகிறது.
துலாம்: சுக்கிரனை ராசி நாதனாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே உங்களுக்கு நல்ல வேலை கிடைக்கப்போகிறது. வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசனும் சம்பள உயர்வுடன் கூடிய இடமாற்றமும் கிடைக்கும். சொந்த வீடு வாங்குவீர்கள். அலுவலகத்தில் மதிப்பு மரியாதை கூடும். பேர் புகழ் தேடி வரும். குடத்தில் இட்ட விளக்காக இருந்த நீங்கள் இந்த ஆண்டு குன்றில் மேலிட்ட விளக்காக சுடர்விட்டு பிரகாசிப்பீர்கள். ஸ்ரீரங்கம் ரங்கநாதரை தரிசனம் செய்ய வெற்றிகள் தேடி வரும்.
விருச்சிகம்: பிறக்கப் போகும் புத்தாண்டு விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு அதி அற்புதமான ஆண்டாக அமையப்போகிறது. வருமானம் அதிகரிக்கும் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும் கடன்கள் அடைபடும். குரு பகவான் நல்ல வேலையை தேடித்தரப்போகிறார். சனி பகவான் அந்த வேலையை நிரந்தரமாக்கப்போகிறார். புரமோசனுடன் சம்பள உயர்வும் சிலருக்கு கிடைக்கும். வெற்றி மீது வெற்றி வந்து சேரப்போகிறது.
தனுசு: தொட்டதெல்லாம் பொன்னாகும் காலம் தனுசு ராசிக்காரர்களுக்கு கைகூடி வரப்போகிறது. வேலையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். எதையும் சமாளிக்கும் தெம்பும் தைரியமும் பிறக்கும். பொற்காலமாக இருப்பதால் உங்கள் வாழ்க்கையில் பல அற்புதங்கள் நிகழும். புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். அவசரப்பட்டு முடிவெடுக்காதீர்கள் எதையும் நிதானமாக தேர்வு செய்யுங்கள்.
மகரம்: 2024ஆம் ஆண்டில் உங்களுக்கு பொன்னான வாய்ப்புகள் தேடி வரப்போகிறது. காரணம் குரு பகவானின் பார்வை உங்களுக்கு கிடைக்கப்போகிறது. புதிய தொழில் வாய்ப்புகள் தேடி வரும். செலவுகள் அதிகமாக இருந்தாலும் அதற்கேற்ப வருமானமும் அதிகமாக வரும். செய்யும் வேலைகளை பொறுமையாகவும் நிதானமாகவும் செய்வது நல்லது. பாத சனி என்றாலும் பதற்றப்பட வேண்டாம்.
கும்பம்: 2024ஆம் ஆண்டு முழுக்க உங்களுக்கு ஜென்ம சனி காலம் என்றாலும் பெரிதாக பாதிப்பு எதுவும் ஏற்படப்போவதில்லை. தொழில் வியாபாரத்தில் அகலக்கால் வைக்காதீர்கள். 2024ஆம் ஆண்டில் வியாபாரத்தில் பெரிய முதலீடு எதையும் செய்யாதீர்கள். வேலை செய்யும் இடத்திலும் வார்த்தைகளில் நிதானம் தேவை இல்லாவிட்டால் பிரச்சினைதான். புத்தாண்டில் நிதானமாக ஒவ்வொரு அடியையும் வைத்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.
மீனம்: உங்களுக்கு ஆண்டு முழுவதும் பண வருமானம் அதிகரிக்கும். புதிய வேலை கிடைக்கும். புதிய தொழில் தொடங்கலாம். வேலை செய்யும் இடத்திலும் வீட்டிலும் உங்கள் கை ஒங்கியே இருக்கும். ஏழரை சனியாக இருந்தாலும் நன்மைகள் அதிகம் நடைபெறும் ஆண்டாகவும் அமையப்போகிறது. வேலை செய்யும் இடத்தில் யாரை நம்பியும் பொறுப்பை ஒப்படைக்க வேண்டாம். புத்தாண்டு உங்களுக்கு புதுமைகளை தரக்கூடிய ஆண்டாக அமையப்போகிறது.