Wednesday, 13 December 2023

2024-ல் நிகழும் அரிய நிகழ்வு: இந்த 3 ராசிக்கு புத்தாண்டு சிறப்பாக இருக்கப் போகுது..!!!

SHARE

2023 ஆம் ஆண்டின் இறுதியில் உள்ளோம். இன்னும் சில நாட்களில் 2024 ஆம் ஆண்டில் நுழையவுள்ளோம். பலருக்கும் வருகிற புத்தாண்டு எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள ஆவல் இருக்கும். அதுவும் வருகிற புத்தாண்டில் பல கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படவுள்ளன. இதனால் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் பெரிய மாற்றங்கள் ஏற்படவுள்ளன.

ஜோதிடத்தின் படி, இந்த புத்தாண்டில் சனி, குரு, ராகு ஆகிய கிரகங்கள் சிறப்பு வாய்ந்ததாக திகழ்கின்றன. ஏனெனில் இந்த கிரகங்களால் அரிய நிகழ்வு நடைபெறவுள்ளது. இந்நிகழ்வானது சுமார் 1000 ஆண்டுகளுக்கு பின் ஏற்படுகிறது. அது என்னவெனில், சனி பகவான் தனது மூல திரிகோண ராசியான கும்ப ராசியில் பயணிப்பார்.

குரு பகவான் ஆண்டின் முதல் 5 மாதங்கள் மேஷ ராசியில் இருந்து, மே மாதம் முதலாக ரிஷப ராசியில் பயணிக்கவுள்ளார். இது தவிர ராகு குரு பகவானின் ராசியான மீன ராசியில் ராகு பயணித்து வருகிறார். இப்படியான சூழ்நிலை சுமார் 1000 ஆண்டுகளுக்கு பின் நிகழ்கிறது. இதனால் சில ராசிக்காரர்களுக்கு 2024 ஆம் ஆண்டு மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கப் போகிறது. இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் 2 ஆவது கட்டம் நடக்கிறது. இதனால் இந்த ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். நிறைய பணத்தை சேமிக்கவும் முடியும். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.

திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உறவில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகமாக இருக்கும். இதனால் பல வேலைகளில் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும். சவால்கள் அனைத்தையும் வென்று காட்டுவீர்கள்.


மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு 2024 ஆம் ஆண்டு அதிர்ஷ்டத்தை வாரி வழங்கப் போகிறது. இந்த ராசிக்காரர்கள் நிறைய செல்வத்தை பெறுவார்கள். நிலுவையில் உள்ள வேலைகள் இந்த ஆண்டில் தடையின்றி முடிவடையும். பிப்ரவரி முதல் தொழிலில் நல்ல ஏற்றத்தைக் காண்பீர்கள். கடின உழைப்பிற்கான முழு பலனையும் இந்த ஆண்டில் பெறுவீர்கள். பணிபுரிபவர்கள் பதவி உயர்வைப் பெறலாம்.

அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு இந்த ஆண்டில் இருப்பதால், செய்யும் காரியங்களில் வெற்றி காண்பீர்கள். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். ஆனால் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு வருகிற 2024 ஆம் ஆண்டு சிறப்பானதாக இருக்கும். இந்த ஆண்டில் முடிவெடுக்கும் திறன் அதிகரிக்கும். தன்னம்பிக்கையால் பல வேலைகளில் வெற்றி காண்பீர்கள். எப்பேற்பட்ட சூழ்நிலைகளையும் எளிதில் சமாளிப்பீர்கள். குரு பகவானின் அருளால் போட்டித் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று வெற்றி பெறுவிர்கள்.

ஆனால் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். பணியிடத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. சிலர் வெளியூர் பயணங்களை அதிகம் செய்ய வேண்டியிருக்கும். இதனால் நிறைய பண செலவுகளை சந்திக்க நேரிடும். சனி பகவானின் அருளால் வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். இந்த ஆண்டில் முதலீடுகளை செய்தால் இரட்டிப்பு பலன் கிடைக்கும்.
SHARE