Saturday, 9 December 2023

சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் 2024 பிப்ரவரி வரை இந்த 3 ராசிக்கு பண மழை பொழியப் போகுது..!!!

SHARE

நவகிரகங்களில் செல்வம், செழிப்பு, ஆடம்பரம், காதல் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றக்கூடியவர் மற்றும் அவ்வப்போது நட்சத்திரங்களையும் மாற்றுவார். ஜோதிடத்தில் சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார்.

இந்த சுக்கிரன் தற்போது தனது சொந்த ராசியான துலாம் ராசியில் பயணித்து வருகிறார். மேலும் டிசம்பர் மாதத்தின் இறுதியில், அதாவது டிசம்பர் 25 ஆம் தேதி சுக்கிரன் விருச்சிக ராசிக்குள் நுழையவுள்ளார். விருச்சிக ராசியில் நுழைந்த பின், சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி நிகழவுள்ளது. அதுவும் டிசம்பர் 28 ஆம் தேதி சுக்கிரன் அனுசம் நட்சத்திரத்தில் நுழையவுள்ளார்.

இந்த நட்சத்திரத்தில் 2024 பிப்ரவரி 17 ஆம் தேதி வரை இருப்பார். அதன் பின் கேட்டை நட்சத்திரத்திற்கு சுக்கிரன் செல்வார். அனுசம் நட்சத்திரத்திற்குள் சுக்கிரன் நுழைவதால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். குறிப்பாக சில ராசிக்காரர்களுக்கு இந்த சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியானது அற்புதமான பலன்களை வழங்கவுள்ளது. இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

அனுசம் நட்சத்திரம்

ஜோதிடத்தின் படி, 27 நட்சத்திரங்களில் அனுசம் நட்சத்திரம் 17 ஆவது நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரத்தின் அதிபதி சனி. இந்த நட்சத்திரமானது விருச்சிக ராசியைச் சேர்ந்தது. இந்த ராசியின் அதிபதி செவ்வாய். இப்படிப்பட்ட கலவையில் சுக்கிரனும் நுழைவதால், இந்த சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியானது இன்னும் சிறப்பானதாக இருக்கும்.

ரிஷபம்

சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். வியாபாரத்தில் நிறைய வெற்றியையும், லாபத்தையும் பெறுவார்கள். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் செய்யும் முதலீடுகளால் இரட்டிப்பு பலன் கிடைக்கும். திருமண வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள் முடிவுக்கு வரும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். உங்கள் அழகை அதிகரிக்க நிறைய முயற்சிகளை செய்வீர்கள்.


கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், இனிமையாகவும் இருக்கும். திருமணமாகாதவர்கள் எதிர்பார்த்த வாழ்க்கைத் துணையை இக்காலகட்டத்தில் கண்டுபிடிக்கலாம். போட்டி தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருப்பவர்கள் நல்ல வெற்றியைப் பெற வாய்ப்புள்ளது. குழந்தைகளுடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடும் வாய்ப்பைப் பெறுவீர்கள். வாகனம், சொத்து, வீடு போன்றவற்றை வாங்கும் வாய்ப்புகள் கிடைக்கும். பழைய முதலீடுகளால் நல்ல லாபம் இக்காலத்தில் கிடைக்கும். இதனால் உங்கள் வங்கி இருப்பு அதிகரிக்கும். மொத்தத்தில் நிதி நிலை பிப்ரவரி வரை சிறப்பாக இருக்கும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியானது நன்மைகளை வாரி வழங்கும். வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். நீண்ட நாட்களுக்கு பின் உடன் பிறந்தவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். பணியிடத்தில் உங்கள் வேலையால் உயர் அதிகாரிகள் மகிழ்ச்சி அடைவர். புதிய வீடு, வாகனம் அல்லது ஆடம்பர பொருட்களை வாங்குவதற்கான வாய்ப்புகள் உருவாகும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். மொத்தத்தில் இந்த சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் நிறைய செல்வத்தை குவிக்க முடியும்.
SHARE