மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் நினைத்தது நிறைவேறும் மாதமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவு பணவரவு ஏற்பட வாய்ப்புகள் இருந்தாலும் சில திடீர் செலவுகளால் கையில் இருக்கும் சேமிப்புகள் கரைய வேண்டிய சூழ்நிலை ஏற்படும். உடல் நலனில் நல்ல முன்னேற்றம் தென்படும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சனைகள் பெரிதாகாமல் தவிர்க்க முடியும். புதிதாக எந்த ஒரு காரியத்தையும் இந்த மாதத்தில் தொடங்குவதை தவிர்ப்பது நன்மை.
வேலையை பொருத்தவரை சிலருக்கு எதிர்பார்த்த சலுகைகள் அவர்களைத் தேடி வரும். வேலையை சிறப்பாக செய்து முடிப்பதன் மூலம் அலுவலகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும் வாய்ப்புகள் அதிகமாக இஇருக்கிறது. வேலை தேடுபவர்களுக்கு நினைத்த வேலை கிடைக்கும். தொழிலை பொருத்தவரை நினைத்த லாபம் கிடைக்கும். அதனால் தொழிலை முன்னேற்றுவதற்கு செய்யக்கூடிய அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வீர்கள். புதிய முதலீடு செய்வதை மட்டும் தவிர்ப்பது நன்மை தரும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு முருகப்பெருமானை வழிபட வேண்டும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் நிதானமாக செயல்பட வேண்டிய மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை வரவிற்கேற்ற செலவு ஏற்படும். உடல் நலனில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் அவ்வப்பொழுது மருத்துவ செலவுகள் ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை மேலோங்கும் என்றாலும் ஒரு முடிவை எடுப்பதற்கு முன்பு துணையின் அறிவுரையை கேட்டு எடுத்தால் பிரச்சனைகள் வராமல் பார்த்துக் கொள்ள முடியும். நண்பர்களுடன் பழகும் பொழுது ஜாக்கிரதையுடன் இருப்பது நல்லது. மேலும் மறுமுக எதிர்ப்புகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். இருப்பினும் பிறரிடம் தங்களின் வேலையை ஒப்படைக்காமல் தாங்களே செய்வதன் மூலம் வேலையில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கலாம். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்காது என்றாலும் உழைப்புக்கேற்ற லாபம் கிடைக்கும். புதிதாக முதலீடு செய்வதற்கு முன் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து நலம் விரும்பிகளின் ஆலோசனையை பெற்று முதலீடு செய்வது நன்மை தரும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு பெருமாளை வழிபட வேண்டும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சிறப்பான மாதமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவு பணவரவு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. ஒரு சிலருக்கு எதிர்ப்பாராத பண வரவும் ஏற்படும். உடல்நலம் சீராக இருக்கும். இருப்பினும் உணவு பழக்கங்களில் கவனம் தேவை. கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரித்தாலும் சிறு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. கலந்துரையாடி அந்த பிரச்சினைகளை தீர்ப்பது நன்மை தரும். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். ஒரு சிலருக்கு தள்ளிப் போயிருந்த குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
வேலையை பொருத்தவரை வேலையில் சாதகமான சூழ்நிலையை நிலவுகிறது. ஒரு சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு சம்பள உயர்வு போன்றவை கிடைக்க வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது. தொழிலை பொருத்தவரை தொழில் லாபகரமாக இருக்கும். புதிய முதலீடுகள் செய்வதை தவிர்ப்பது நன்மை தரும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு சிவபெருமானை வழிபட வேண்டும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் புத்துணர்ச்சியான மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை சாதகமான சூழ்நிலையே தென்படுகிறது. பணவரவிற்கு எந்தவித குறையும் இருக்காது. உடல் நலத்தில் கவனம் தேவை. சிறிய உபாதை ஏற்பட்டவுடன் அது சம்பந்தப்பட்ட மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவதன் மூலம் பெரிய பிரச்சினை வராமல் தவிர்க்க முடியும். கணவன் மனைவிக்கு இடையே பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் விட்டுக் கொடுத்தும் அனுசரித்தும் செல்வது நன்மை தரும். இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் படிப்படியாக நீங்க வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. ஒரு சிலருக்கு புதிய ஆதாயங்களை பெறுவதற்கு வாய்ப்புகளும் இருக்கிறது.
வேலையை பொருத்தவரை வேலை சூழல் சாதகமாகவே இருக்கிறது. ஒரு சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்க வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்காது. எனினும் தொடர்ந்து முயற்சி செய்வதன் மூலம் பிற்காலத்தில் பாதிப்புகள் ஏதும் ஏற்படாமல் தொழிலை நல்ல முறையில் நடத்த முடியும். ஒரு சிலருக்கு புது முயற்சிகள் வெற்றி தரும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு வெங்கடாசல பெருமானை வழிபட வேண்டும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் ஏற்றம் மிகுந்த மாதம் திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை பணவரவிற்கு எந்தவித குறையும் இருக்காது. எனினும் செலவுகள் செய்யும் பொழுது ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செய்தால் வீண் விரையம் ஆவதை தவிர்க்க முடியும். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் உணவு பழக்கத்தை முறையாக மேற்கொள்ள வேண்டும். குடும்பத்தில் சில பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. அதை கண்டும் காணாமல் விட்டுவிட்டால் ஒன்றும் இல்லாமல் போய்விடும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். மேலும் புதிய வருமானத்திற்காக முயற்சி செய்பவர்களுக்கு அவர்கள் முயற்சி வெற்றி அடையும்.
வேலையை பொருத்தவரை வேலையில் சாதகமான சூழ்நிலையை நிலவுகிறது. புதிதாக வேலை தேடுபவர்களுக்கு நினைத்த வேலை கிடைக்க வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. ஒரு சிலருக்கு தாங்கள் எதிர்பார்த்த சலுகைகள் அனைத்தும் கிடைக்க வாய்ப்புகள் இருக்கிறது. தொழிலை பொருத்தவரை எதிர்பார்த்ததை விட லாபம் அதிகமாக கிடைக்கும். புதிதாக தொழில் செய்ய நினைப்பவர்களுக்கு சிறந்த காலமாக திகழப் போகிறது. தொழிலை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல முடியும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு துர்க்கை அம்மனை வழிபட வேண்டும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் கனவுகள் நிறைவேறும் மாதமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை பண வரவிற்கு எந்தவித குறையும் இருக்காது. எனினும் வீண் விரயம் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது நன்மை தரும். உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த குறைபாடுகள் அனைத்தும் நீங்கி உடல் ஆரோக்கியமாக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் துணையுடன் அமைதியான போக்கை கையாளுவது நன்மை தரும். சமுதாயத்தில் மரியாதை கிடைக்கும். முயற்சிகள் வெற்றியடையும்.
வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாக இருக்கும். அதை திறம்பட செய்து முடிப்பதன் மூலம் அதிகாரிகளின் பாராட்டை பெறுவதற்குரிய வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது. தொழிலை பொருத்தவரை இரட்டிப்பு லாபத்தை பெறுவதற்குரிய வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. அதனால் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு ஆஞ்சநேயரை வழிபட வேண்டும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் பொறுமையை கையாள வேண்டிய மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு பணவரவு இருக்கும். அதற்கேற்றார் போல் செலவுகளும் ஏற்படும். உடல் நலன் சீராக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமைகள் அதிகரிக்கும். ஒரு சிலருக்கு வெளிநாட்டு யோகம் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. கூடுமானவரை யாரிடமும் தேவையில்லாத பேச்சுக்கள் பேசுவதை தவிர்ப்பதன் மூலம் பிரச்சனைகள் ஏற்படுவதில் இருந்து தப்பித்துக் கொள்ள முடியும்.
வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருந்தாலும் உடன் பணிபுரிபவர்களின் துணையுடன் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். அதனால் உங்களுக்கு பல சலுகைகள் கிடைக்க வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது. தொழிலை பொருத்தவரை தொழில் லாபகரமாக இருக்கும். தொழில் சம்பந்தப்பட்ட பிரயாணங்கள் வெற்றியைத் தரும். இருப்பினும் எதிரிகளால் தொல்லைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு வள்ளி தெய்வானை சம்மத முருகப்பெருமானை வழிபட வேண்டும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் தைரியம் நிறைந்த மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவு பணவரவு கிடைக்கும். உடல் நலம் சீராக இருக்கும். இதுவரை கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மோதல்கள் அனைத்தும் நீங்கி ஒற்றுமை மேலோங்கும். குடும்பத்தில் இருக்கும் நபர்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதன் மூலம் மருத்துவ செலவை குறைத்துக் கொள்ள முடியும்.
வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருந்தாலும் தங்களின் புத்திசாலித்தனத்தால் அதை செம்மையாக செய்து முடித்து அலுவலகத்தில் நல்ல பெயரை வாங்குவீர்கள். தொழிலைப் பொருத்தவரை தொழில் லாபகரமாக நடக்கும். கடன் வாங்கி தொழிலை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்லும் யோகம் சிலருக்கு இருக்கிறது. இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு லட்சுமி நரசிம்மரை வழிபட வேண்டும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் அதிர்ஷ்டகரமான மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்க்காத அளவிற்கு பணவரவு ஏற்படப்போகிறது. அதனால் வங்கியில் சேமிப்புத் தொகையானது அதிகரிக்கும். உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை மேலோங்கும். நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடிக்கும் ஆற்றலை பெறுவீர்கள். வண்டி வாகனம் வீடு வாங்கக்கூடிய யோகம் கூடிவரும்.
வேலையை பொருத்தவரை வேலை சுமை குறைவாகவே இருக்கும். தங்கள் வேலையை சிறப்பாக செய்து முடிப்பதன் மூலம் எதிர்பார்த்த சலுகைகள் அனைத்தையும் பெற முடியும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பாராத லாபம் கிடைப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது. முதலீடு செய்வதற்கு ஏற்ற காலமாக இந்த காலம் திகழப்போகிறது. புதிய தொழில் தொடங்க விரும்புவோருக்கு சாதகமான காலமாக இந்த காலம் இருக்கும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு ஆஞ்சநேயரை வழிபட வேண்டும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் விஸ்வரூப வெற்றியைத் தரும் மாதமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பாராத இடங்களில் இருந்து பல வகைகளில் பணவரவு வரும். உடல்நலம் சீராக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரித்தாலும் சில சண்டைகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது விட்டுக் கொடுத்து செல்வதன் மூலம் எந்த பாதிப்பும் ஏற்படாது. விடாமுயற்சியுடன் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடித்து நல்ல பலனை அடையும் மாதமாகவே இந்த மாதம் திகழும். அதனால் ஒரு முறைக்கு பலமுறை முயற்சி செய்து பணவரவை பெறுவீர்கள்.
வேலையை பொருத்தவரை இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி மேல் அதிகாரிகளின் ஆதரவை பெற்று எதிர்பார்த்த சலுகைகள் அனைத்தையும் பெற்று மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். தொழிலைப் பொருத்தவரை தொழிலில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் விலகி தொழில் லாபகரமாக நடக்கும். புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடையும். ஒரு தொழிலுக்கு பல தொழில் செய்து லாபத்தை அதிகரிப்பீர்கள். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு விநாயகரை வழிபட வேண்டும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் தொட்டது துவங்கும் மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை பணவரவிற்கு எந்தவித குறையும் இருக்காது. இருப்பினும் ஒரு சிலருக்கு வீட்டை புதுப்பிப்பதில் செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. உடல்நலம் சீராக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். திருமணத்தை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். குழந்தை பாக்கியம் தள்ளிப் போனவர்களுக்கு விரைவிலேயே குழந்தை பாக்கியம் பெரும் வாய்ப்பு ஏற்படும்.
வேலையை பொருத்தவரை வேலை சுமை குறைய ஆரம்பிக்கும். ஒருவேலைக்கு பல வேலைகள் செய்து அதன் மூலம் பல வருமானங்களை பெறுவீர்கள். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தொழிலை பொருத்தவரை தொழில் லாபகரமாக நடக்கும் என்றாலும் கடின உழைப்பிற்கு ஏற்ற பலனை கிடைக்கும் என்பதால் விடா முயற்சியுடன் முயற்சி செய்ய வேண்டும். எடுத்த காரியங்கள் அனைத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகிழ்வதற்கு மகாலட்சுமி தாயாரை வழிபட வேண்டும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் வாய்ப்புகள் தேடி வரும் மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை பணவரவு பல வழிகளில் வந்து சேரும். உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் நீங்கி உடல் நலன் மேலோங்கும். கணவன் மனைவிக்கிடையே சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் அவை நீங்கி ஒற்றுமையுடன் மகிழ்ச்சியுடனும் வாழ்வீர்கள். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். அதனால் உங்களின் மதிப்பும் மரியாதையும் கூடி புகழ் அதிகரிக்கும் மாதமாகவே இந்த மாதம் திகழும்.
வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாக இருந்தாலும் அந்த வேலையை செம்மையாக செய்து முடிப்பதன் மூலம் வேலையில் முன்னேற்றம் ஏற்பட்டு எதிர்பார்த்த சலுகைகள் அனைத்தும் கிடைக்கும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். அந்த லாபத்தை இரட்டிப்பாக்குவதற்கு அதிகமாக முயற்சிகளை எடுப்பீர்கள். அந்த முயற்சியில் வெற்றியும் பெறுவீர்கள். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.