இன்றைய ராசிபலன் - 20.12.2023..!!!
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கக்கூடிய நாளாக இருக்கும். உங்களை எதிர்த்து பேசியவர்கள் எல்லாம், உங்களை பார்த்தவுடன் பணிந்து செல்வார்கள். எதிரிகள் கூட நட்புறவு பகழகுவார்கள். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த சண்டை ஒரு முடிவுக்கு வரும். குழந்தைகளால் பெற்றவர்களுக்கு பெருமை சேரும். வியாபாரத்தில் கூடுதல் கவனம் தேவை, வியாபார கணக்கு வழக்கை தினமும் சரியாக சரி பார்க்கவும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று வாய்ப்புகள் தேடி வரும். புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். வருமானம் சீராக இருக்கும். வாங்கிய கடனை திருப்பிக் கொடுப்பீர்கள். வெளிநாட்டு வேலைக்கு போக வேண்டும் என்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். குடும்பத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் வர வாய்ப்புகள் உள்ளது. அனுசரித்து செல்லுங்கள். உறவுகளுடன் விட்டுக் கொடுங்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று மன அழுத்தம் கொஞ்சம் அதிகமாக இருக்கும். ஏதாவது ஒரு பிரச்சனையை நினைத்து யோசித்து சிந்தித்துக் கொண்டே இருப்பீர்கள். இதனாலேயே வேலை சரியாக ஓடாது. வேலையில் பின்னடைவு ஏற்படும். மேலதிகாரிகளிடம் திட்டு வாங்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். வேலையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வியாபாரத்தில் பாட்டனரை மட்டும் நம்பி அப்படியே விடக்கூடாது. கணக்கு வழக்குகளை நீங்களும் கொஞ்சம் கவனியுங்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று செலவுகள் அதிகம் நிறைந்த நாளாக இருக்கும். கொஞ்சம் கவன குறைவாக நடந்தால் கையில் இருக்கும் மொத்த சேமிப்பும் கரையும். ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். அடுத்தவர்களுக்கு பாவம் பார்ப்பதில் நன்மைதான். ஆனால் தனக்கு போக தான் தானமும் தர்மமும் என்ற வார்த்தையை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். பிறகு உங்களுக்கு பிரச்சனை என்றால் அடுத்தவர்களிடம் கை நீட்ட வேண்டிய சூழ்நிலை உண்டாகிவிடும் ஜாக்கிரதை.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும். நினைத்தது நடக்கும். தேவைகளை பூர்த்தி செய்யும் அளவுக்கு வருமானம் இருக்கும். கமிஷன் தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் உண்டு. வியாபாரத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். போனபோக்கில் முதலீடு செய்வது போன போக்கில் கணக்கு வழக்கு பார்க்காமல் வியாபாரத்தை நடத்துவது எதிர்காலத்துக்கு நல்லது அல்ல.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும். யாரையும் பார்த்து பயப்பட மாட்டீங்க. வெட்டு ஒன்னு துண்டு இரண்டு என்று பேசுவீர்கள். மாமியார் மருமகள் சண்டையால் குடும்பத்தில் விரிசல் ஏற்படும். ஆகவே உறவுகளை அனுசரித்து செல்ல வேண்டும். எனக்குத்தான் எல்லாம் தெரியும் என்று தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்காதீங்க. பெரியவர்களின் சொல் பேச்சு கேட்டு நடக்கணும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று கூடுதல் கவனம் தேவை. எந்த ஒரு விஷயத்திலும் அலட்சிம் கூடாது. கையில் இருக்கும் சின்ன துரும்பு முதல், பெரிய பணம் காசு நகை வரை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். பொருள் இழப்பு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. காதல் கைகூடும். திருமணத்தைப் பற்றிய பேச்சு வார்த்தை வீட்டில் பேசத் தொடங்குவார்கள். பெரியவர்களின் ஆலோசனைப்படி நீங்க நடந்துக்கணும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று மன நிம்மதியான நாளாக இருக்கும். பெரிய அளவில் பிரச்சனைகள் எதுவும் வராது. அன்றாட வேலை சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் சின்ன சின்ன சிக்கல்கள் வர வாய்ப்பு உள்ளது. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனம் இருக்கணும். வாகனங்களில் செல்லும்போது கூடுதல் கவனம் இருக்கட்டும். பெண்கள் சமையலறையில் நெருப்பு, கத்தி இவைகளில் வேலை செய்யும் போது மனதை ஒருநிலைப்படுத்தி வேலை செய்யவும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். வேலையில் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். மேல் அதிகாரியின் ஆதரவை பெறுவீர்கள். பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய முதலீட்டிற்கு தேவையான நிதி உதவி கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு.
மகரம்
மகர ராசிக்காரர்கள் இன்று நேர்வழியில் நடந்து கொள்ள வேண்டும். யாரிடமும் பொய் சொல்லக்கூடாது. சின்ன சின்ன பிரச்சனைகள் கூட பெரிய பிரச்சனைகள் ஆவதற்கு வாய்ப்புகள் உள்ளது. ஆகவே எந்த ஒரு விஷயத்தையும் சாதாரணமாக நினைத்து விட்டுடாதீங்க. பெரிய மனிதர்களின் ஆதரவு உங்களுக்கு நன்மையை தரக்கூடியதாக அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சி இரட்டிப்பாகும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று செல்வாக்கு உயரும். மதிப்பும் மரியாதையும் கூடுதலாக கிடைக்கும். நீங்க சொல்லக்கூடிய வார்த்தைக்கு நான்கு பேர் மரியாதை கொடுப்பார்கள். சில பேருக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளது. அரசாங்க உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத நல்லது நடக்கும். வீட்டில் குழந்தைகள் பெரியவர்கள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். ஆரோக்கியம் விஷயத்தில் காசு பணம் பார்க்க வேண்டாம். அலட்சியம் வேண்டாம்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று சிந்தனை அலைபாயும். சில பேராசைகளா மனதில் தோன்றும். இருக்கிற வேலையை விட்டுவிட்டு பறக்க ஆசைப்படாதீங்க. பிறகு பிரச்சனை உங்களுக்கு தான். நின்று நிதானமாக யோசித்து முடிவு எடுக்கவும். மனைவி சொல் பேச்சு கேட்டு நடக்கவும். ஆர்வக்கோளாறில் சில தவறுகள் நடக்க வாய்ப்பு உள்ளது. புதிய முடிவுகள் எடுப்பதை அடுத்த நாள் தள்ளி போடுங்கள். பொன் பொருள் சேர்க்கை இருக்கும்.