Friday, 1 December 2023

அகில இலங்கை ரீதியில் 2 ஆம் இடத்தில் யாழ். வேம்படி மகளிர் கல்லூரி - கல்வி அமைச்சர்..!!!

SHARE

வெளியிடப்பட்டுள்ள 2022 கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளின் பிரகாரம் 2இலட்சத்தி 45ஆயிரத்தி 521 மாணவர்கள் (72.07 வீதமானவர்கள்) உயர்கல்விக்கு தகுதி பெற்றுள்ளனர். கடந்த வருடம் உயர்கல்விக்கு நூற்றுக்கு 62.63 வீதமானவர்கள் தகுதி பெற்றிருந்தனர்.

அத்துடன் கடந்த வருடம் அனைத்து பாடங்களிலும் 11ஆயிரத்தி 53பேர் ஏ சித்தி பெற்றிருந்தனர். அது 3.31 வீதமாகும். இந்த முறை 13ஆயிரத்தி 588பேர் 9 ஏ சித்திகளை பெற்றுள்ளனர். அது 3.99 வீதமாகும்.

அதன் பிரகாரம் வெளியிடப்பட்டுள்ள பெறுபேறுகளுக்கமை முதலாம் இடத்தை கண்டி மஹாமாயா மகளிர் வித்தியாலய மாணவி ஒருவர் பெற்றுள்ளதுடன் இரண்டாம் இடத்தை யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர் கல்லூரி மாணவி ஒருவரும் மூன்றாம் இடத்தை கொழும்பு ராேயல் கல்லூரி மாணவனும் பிடித்துள்ளனர்.

அதேநேரம் 4ஆம் இடத்தை கொழும்பு ராேயல் கல்லூரி மற்றும் கம்பஹா திருச்சிலுவை மகளிர் வித்தியாலயம் பெற்றுள்ளதுடன் 6ஆம் இடத்தில் 4பேர் இருக்கின்றனர். காலி சங்கமித்தா மகளிர் கல்லூரியில் இரண்டுபேர், குருணாகல் மரிய தேவ ஆண்கள் வித்தியாலயம், திருகோணமலை ஸ்ரீசண்முகா இந்து மகளிர் கல்லூரி, பத்தாம் இடத்தில் 2பேர் இருக்கின்றனர். அது கொழும்பு மியூசியஸ் கல்லூரி மற்றும் கண்டி உயர் மகளிர் கல்லூரி ஆகியனவாகும்.

உயர் கல்வி விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கை தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக 3மாதங்கள் பிற்படுத்தப்பட்டதால் கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளிவர தாமதமாகின.

என்றாலும் ஆகஸ்ட் மாதம் விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு 3மாதங்களுக்குள் பெறுபேறுகளை வெளியிட நடவடிக்கை எடுத்தமை தொடர்பில் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

அதேநேரம் இறுதியாக வெளியிடப்பட்ட கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் பிரகாரம் பல்கலைக்கழகங்களுக்கு ஏற்புடைய பீடங்களுக்கு இணைத்துக்கொள்வதற்கான வெட்டுப்புள்ளி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் வெள்ளிக்கிழமை (01) வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு முன்னரான காலங்களில் உயர் தர பரீட்சை இடம்பெற்று நீண்ட காலத்துக்கு பின்னரே வெளியிடப்பட்டிருக்கிறது.

என்றாலும் இந்த முறை 6மாதங்களுக்குள் வெட்டுப்புள்ளி வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அதன் பிரகாரம் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் எந்த பீடங்களுக்கு தகுதி பெற்றுள்ளார்கள் என்பதை இணையத்தளம் ஊடாக வெட்டுப்புள்ளியுடன் பார்த்துக்கொள்ள முடியும்.என்றார்.
SHARE