இன்றைய ராசிபலன் - 19.12.2023..!!!
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இன்று அயராது உழைத்து நல்ல பெயர் எடுக்கப் போராடுவீர்கள். கடின உழைப்பு உங்களை வாழ்க்கையில் மேலே உயர்த்தி விடும். நல்லது நடக்கக்கூடிய நாள் இன்று. குடும்பத்தில் இருப்பவர்களுக்கு சௌகரியமான சில விஷயங்களை செய்து கொடுப்பீர்கள். தடைப்பட்டு வந்த சுபகாரி நிகழ்ச்சிகள் மீண்டும் நடப்பதற்காக பேச்சு வார்த்தை நடக்கும். பெரியவர்களிடம் கூடி பேசும் போது மரியாதை அவசியம் உறவுகளுக்கு மதிப்பு கொடுங்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் இன்று பொறுமையாக நடந்து கொள்ள வேண்டும். அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்கக்கூடாது. எதுவாக இருந்தாலும் பெரியவர்களின் ஆலோசனையை கேளுங்கள். முன்பின் தெரியாத நட்பு பிரச்சனையை கொடுக்கும் ஜாக்கிரதை, வேலை செய்யும் இடத்தில் சிக்கல்கள் வரும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் வேண்டாம். இருக்கிற வேலையை அப்படியே தொடருங்கள். சின்ன சின்ன வம்பு சண்டைகள் மூலம் மனநிம்மதி இழக்க வாய்ப்பு உள்ளது.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் பதட்டம் நிறைந்த நாளாக இருக்கும். எந்த பிரச்சனை வருமோ எந்த இடத்தில் சிக்கிக் கொள்வோமோ என்று தெரியாமல் தவிப்பீர்கள். நேர்மையோடு நடந்து கொள்ளுங்கள். அரசாங்கத்துக்கு புறம்பான காரியத்தில் ஈடுபட வேண்டாம். யாரிடமும் பொய் சொல்ல வேண்டாம். குறுக்கு வழியில் செல்லாமல் இருக்கும் பட்சத்தில் பிரச்சனைகள் பெருசாகாது.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் உடல் அசதி இருக்கும். எந்த வேலையிலும் முழு கவனமும் செலுத்த முடியாது. கொஞ்ச நேரம் தூங்கினால் நல்லா இருக்கும் என்று நினைப்பீர்கள். ஆனால் தூங்குவதற்கும் சரியான நேரம் கிடைக்காது. இதனால் தலைவலி வர வாய்ப்பு உள்ளது. ஜாக்கிரதையா இருந்துக்கோங்க. பொறுமையா உங்க வேலையை பாருங்க. அவசர அவசரமா வேலை செய்து, தவறையும் செய்து திட்டுவாங்க.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று அமோகமான ஆதரவு கிடைக்கும். நீங்கள் முன்னேற்ற பாதையில் செல்லும்போது, தடைகள் வந்தால் ஆதரவாக உங்கள் குடும்ப உறுப்பினர்கள் நிற்பார்கள். உறவுகள் நண்பர்களுடைய நல்ல மனதை இன்று நீங்கள் புரிந்து கொள்வீர்கள். யாரெல்லாம் நல்லவர்கள் என்று நினைத்தீர்களோ அவர்கள் எல்லாம் உங்களுக்கு எதிராக செயல்படுவார்கள். யாரெல்லாம் கெட்டவர்கள் என்று நினைத்தீர்களோ அவர்களெல்லாம் உங்களுக்கு சாதகமாக பேசுவார்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சுறுசுறுப்பான நாளாக இருக்கும். எல்லா விஷயத்திலும் கொஞ்சம் அவசரம் படுவிங்க. இன்றே முடித்து விட வேண்டும், இப்போதே முடித்துவிடும் என்று அடம் பிடித்து சில காரியங்களை சாதிப்பீர்கள். பிரச்சனை இருக்காது. நல்லது தான் நடக்கும். பாராட்டுகள் குவியும். உங்கள் துருதுரு வேலையை பார்த்து நாலு பேர் கண் வைக்கும் அளவுக்கு இன்று உங்கள் நாள் மேலோங்கி இருக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் முட்டி மோதி தான் ஜெயிக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். உங்களுக்கு பாதகமாக சில வேலைகள் நடக்கும். நண்பர்களே எதிரிகளாக மாற வாய்ப்புகள் உள்ளது. கண்மூடித்தனமாக யாரையும் நம்ப வேண்டாம். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் இருந்தாலும் சின்ன சின்ன சிக்கல்கள் வரும். சமாளிப்பதற்கு திறமையாக செயல்படனும். எந்த பிரச்சினையையும் நினைத்து குழம்பி சோர்ந்து போய் உட்கார கூடாது.
விருச்சகம்
விருச்சக ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். நீங்கள் எதிர்பார்த்த நல்லது நடக்கும். வியாபாரத்தை விரிவு செய்யலாம். புதிய முதலீடு செய்யலாம். வங்கி கடன் பெறலாம். கமிஷன் தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் இருக்கும். விவசாயிகள் உங்களுடைய புதிய முயற்சிகளை கொஞ்சம் தள்ளி போடுங்கள். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு, இன்று இயல்பான வாழ்க்கை எப்போதும் போல செல்லும். எந்த பிரச்சனையும் இருக்காது. நீங்கள் அனாவசியமாக மனதிற்குள் சந்தேகத்தை வளர்த்துக் கொள்ளக் கூடாது. அடுத்தவர்களின் நம்ப வேண்டும். குறிப்பாக கணவன் மனைவிக்குள் நல்ல நட்பு இருக்க வேண்டும். ஒருவருக்கொருவர் ஏமாற்றிக் கொண்டு, பொய் பேசிக்கொண்டு உறவை பலப்படுத்த வேண்டாம். உண்மையை சொல்லுங்கள். உண்மையாக நடந்து கொள்ளுங்கள் நல்லதே நடக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் இன்று சொன்ன வாக்கை நிறைவேற்றுவீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மை இருக்கும். மனமகிழ்ச்சியோடு இன்றைய நாள் நகர்ந்து செல்லும். தானதர்ம காரியங்கள் செய்வதற்கு வாய்ப்புகள் கிட்டும். ஆன்மீகம் சார்ந்த விஷயங்கள் மன நிம்மதியை கொடுக்கும். மாணவர்கள் கல்வியில் கொஞ்சம் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். தாய்மாமன் வழி உறவால் நன்மை நடக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று எரிச்சல் ஊட்டக்கூடிய விஷயங்கள் நடக்கும். சுற்றி இருப்பவர்கள் உங்களை நிம்மதியாக இருக்கவே விட மாட்டார்கள். எதையாவது பேசிப் பேசி குழப்பி விடுவார்கள். நீங்க குழம்பாதிங்க. உங்கள் மனதுக்கு சரி என்று பட்டதை செய்யுங்கள். அடுத்தவர்கள் பேச்சைக் கேட்டால் இன்று சிக்கல் வந்துவிடும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். தேக்கி வைத்திருந்த வேலையை எல்லாம் இன்று முடிக்க முயற்சி செய்வீர்கள். அரசாங்க வேலை தடைபடாமல் நடக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். முன்னேற்றம் நிறைந்த இந்த நாளை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். பண விஷயத்தில் கூடுதல் கவனம் இருக்கட்டும். கையில் இருக்கும் பணத்தை அனாவசியமாக செலவு செய்யக்கூடாது. சேமிப்பு அவசியம்.