18% VAT அதிகரிப்பு – 95 பொருட்களின் பட்டியல் இதோ..!!!
2024 ஜனவரி 1 முதல் அமுலுக்கு வரும் பெறுமதி சேர் வரி உட்பட்ட பொருட்களின் பட்டியலை இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க பாராளுமன்றத்தில் இன்று (11) சமர்ப்பித்தார்.
சமையல் எரிவாயு, பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவையும் பெறுமதி சேர் வரி அதிகரிப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் இன்று (11) 45 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது.
இதற்கமைய தற்போது 15 சதவீதமாக அறவிடப்படும் பெறுமதி சேர் வரியானது எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் 18 சதவீதமாக அதிகரிக்கப்படவுள்ளது.