சூரியனின் அருளால் டிசம்பர் 16 முதல் இந்த 3 ராசிக்காரர்களின் கையில் பணம் அதிகம் சேரப் போகுது..!!!
நவகிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றக்கூடியவர். சூரியனின் ராசி மாற்றம் நிகழும் போது தமிழ் மாதங்கள் பிறக்கும். ஜோதிடத்தில் சூரியன் சிம்ம ராசியின் அதிபதியாவார். அந்த வகையில் டிசம்பர் 16 ஆம் தேதி சூரியன் குரு பகவானின் ராசியான தனுசு ராசிக்குள் நுழைகிறார்.
சக்தி, நம்பிக்கை, தலைமைத்துவம், அரசியல்வாதி, புத்திசாலித்தனம், அதிர்ஷ்டத்தின் காரணியாக கருதப்படுபவர் சூரியன். இப்படிப்பட்ட சூரியன் தனுசு ராசிக்குள் ஒரு வருடம் கழித்து நுழைகிறார். மங்களகரமான குரு பகவானின் ராசிக்குள் சூரியன் நுழையும் போது அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். குறிப்பாக இந்த சூரிய பெயர்ச்சிக்கு பின் சில ராசிக்காரர்கள் சூரியனின் அருளால் நல்ல பண வரவைப் பெறவுள்ளார்கள். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் சூரயனின் அருளால் நல்ல நிதி நன்மைகளைப் பெறவுள்ளார்கள். சிலருக்கு ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பு தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும்.
மேலும் பெற்றோருடனான உறவு நன்றாக இருக்கும். குழந்தைகளிடம் இருந்து சில நல்ல செய்திகளைப் பெறக்கூடும். தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வணிகர்கள் புதிய ஒப்பந்தத்தைப் பெறுவார்கள்.
சிம்மம்
சிம்ம ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் டிசம்பர் 16 முதல் வெற்றி மேல் வெற்றி காண்பார்கள். பெற்றோருடனான உறவு நன்றாக இருக்கும். எதிர்பாராத சில நல்ல செய்திகளைப் பெற வாய்ப்புள்ளது.
குழந்தைகளுடன் நல்ல தரமான நேரத்தை செலவிடுவீர்கள். மேலும் இக்காலத்தில் ஆசைகள் அதிகரிக்கும் மற்றும் நிறைய செல்வத்தை சம்பாதிக்க வேண்டுமென்ற உணர்வுகளும் அதிகரிக்கும். இதன் விளைவாக நீங்கள் நிதி நெருக்கடியில் இருந்து விடுபடுவீர்கள்.
துலாம்
துலாம் ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு டிசம்பர் 16 முதல் அற்புதமாக இருக்கும். பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் நல்ல லாபத்தைப் பெறக்கூடும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைக்கும். சிலர் சம்பள உயர்வைப் பெறலாம்.
சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றத்தைக் காண வாய்ப்புள்ளது. சிலர் வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ளலாம். இந்த பயணங்களும் நல்ல நிதி நன்மைகளைத் தரும்.