மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வரவு நிறைந்த நாளாக இருக்கும். நீண்ட நாள் வசூல் ஆகாத கடன் வசூல் ஆகும். பணத்தை முதலீடு செய்து அதிக லாபம் சம்பாதிக்க வேண்டும் என்று முடிவு செய்வீர்கள். ஒன்றுக்கு பலமுறை விசாரித்து கையில் இருக்கும் பணத்தை முதலீடு செய்யவும். முன்பின் யோசிக்காமல் முன்பின் தெரியாதவர்கள் சொல்லும் யோசனையை பின்பற்ற வேண்டாம். இன்று பண விஷயத்தில் கூடுதல் கவனம் இருக்கணும். வேலை செய்யும் இடத்தில் நன்மையை நடக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று மனது அலைபாய்ந்து கொண்டே இருக்கும். எந்த விஷயத்துக்கு எந்த முடிவு எடுப்பது என்று தெரியாமல் திக்குமுக்கு ஆடக்கூடிய சூழ்நிலை உண்டாகும். நிறைய பேர் அட்வைஸ் செய்வாங்க. ஆனாலும் அதையெல்லாம் உங்கள் காதில் வாங்கிக்க மாட்டிங்க. குழப்பம் நிறைந்த நேரத்தில் முடிவு எடுப்பதை தள்ளி வைப்பது தான் சிறந்தது. வேலை செய்யும் இடத்தில் கூடுதல் உழைப்பை போட வேண்டும். கவனக்குறைவாக எதையும் செய்யக்கூடாது. வியாபாரத்தில் முதலீடு செய்வதை தவிர்க்கவும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று மனது ரொம்ப ரொம்ப தெளிவாக இருக்கும். எதைப் பற்றியும் குழம்ப மாட்டீங்க. பிரச்சனை வந்தாலும் அதிலிருந்து வருவதற்கு தேவையான வேலைகளை நீங்களே செய்து கொள்வீர்கள். அடுத்தவர்களிடம் உதவி என்று போய் நிக்க மாட்டீங்க. வீட்டில் இருக்கும் பெண்கள் சில விஷயங்களில் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று பேசி முடிவு செய்வீர்கள். குடும்ப பிரச்சனை தீரும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சிகள் நிறைந்த நாளாக இருக்கும். செலவுகள் கொஞ்சம் அதிகமாக இருக்கும். வேறு வழி கிடையாது. தேவையான விஷயங்களுக்கு செலவு செய்துதான் ஆக வேண்டும். வியாபாரத்தில் புதிய நண்பர்களின் நட்பு இலாபத்தை கொடுக்கும். உங்களுடைய ஆளுமை திறமையின் மூலம் நிறைய விஷயத்தை சாதிப்பீர்கள். இன்று தைரியம் துணிச்சல் வெளிப்படும் நாள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றிக்கான நாளாக அமையும். நிறைய முறை முயற்சி செய்து தோற்ற காரியங்களை இன்று கையில் எடுக்கலாம். அரசாங்கம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் கையொப்பம் வாங்க வேண்டிய விஷயங்களை இன்று முயற்சி செய்தால் வெற்றி காண்பீர்கள். சகோதர சகோதர உறவுகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே சின்ன சின்ன பிரச்சனை வர வாய்ப்பு உள்ளது ஜாக்கிரதை. பயணத்தின் போது கவனம் தேவை.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். இதுநாள் வரை இருந்து வந்த ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைக்கு முடிவு கட்டுவீர்கள். பண வரவு சீராக இருக்கும். கொடுக்கல் வாங்கலில் சிக்கல் இருக்காது. கட்டுமான தொழில் வேலை செய்பவர்களுக்கு இன்று நல்ல முன்னேற்றம் இருக்கும். சின்ன சின்ன வியாபாரிகள் புதிய வாடிக்கையாளர்களுக்கு கடன் கொடுக்காதீங்க.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று மனதில் இனம் புரியாத பயம் இருக்கும். வாயைத் திறந்து பேசினால் கூட பிரச்சினை வந்து விடுமோ என்று பயப்படுவீர்கள். சிக்கல் நிறைந்த இந்த நாளை நகர்த்திச் செல்வதற்குள் உங்களுக்கு போதும் போதும் என்று ஆகிவிடும். காலையிலேயே குலதெய்வத்தை நினைத்து வழிபாடு செய்து விட்டு செல்லுங்கள். நிச்சயம் நல்லது நடக்கும். கணவன் மனைவிக்குள் எந்த ஒரு ஒளிவு மறைவும் இருக்க வேண்டாம். மனம் திறந்து பேசுங்கள் நல்லது நடக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று நிதி நிலைமை கொஞ்சம் மோசமாக இருக்கும். செலவுக்கு கையில் பணம் இருக்காது. சம்பளம் வந்து சில நாட்கள் ஆகி இருந்தாலும், அவர்கள் கஷ்டப்பட வேண்டிய சூழ்நிலை இருக்கும். காரணம் பணம் அங்கங்கே சென்று முடங்கி இருக்கும். இதிலிருந்து வெளிவர கொஞ்சம் சிரமப்படுவீர்கள். கந்துவட்டி வாங்காதீங்க. எப்படியாவது தேவைகளை சமாளித்துக் கொள்ளுங்கள். பண வரவை அதிகப்படுத்த வருமானத்தை அதிகப்படுத்த வேண்டுமே தவிர, அடுத்தவர்களிடம் கடன் வாங்கும் பழக்கத்தை குறைக்கவும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவைகள் பூர்த்தி அடையும் நாளாக இருக்கும். மனதில் நினைத்ததை சாதிப்பீர்கள். பிள்ளைகள் சொல் பேச்சு கேட்காமல் அடம்பிடிப்பார்கள். இதனால் பெற்றவர்களுக்கு சில சங்கடங்கள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. தொழிலை விரிவுபடுத்தலாம். வங்கி கடன் கிடைக்கும். வாகனங்களை ஓட்டும்போது கவனமாக இருக்கவும். ஹெல்மெட் போடாமல் காதில் ஹெட்போன் வைத்துக்கொண்டு கவனக்குறைவோடு வாகனம் ஓட்டாதீங்க, ரோட்டில் நடந்து சென்றாலும் ஜாக்கிரதையா இருக்கணும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் லாபகரமான நாளாக அமையும். தொழிலை விரிவு படுத்தலாம். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளை கோபித்துக் கொள்ளாதீர்கள். வார்த்தைகளை அளந்து பேசுங்கள். இருக்கிற வேலையை விட்டு விட்டால் பிறகு கஷ்டப்பட வேண்டிய சூழ்நிலை உண்டாகும். ஜாக்கிரதை. சுப காரிய நிகழ்ச்சிகளை பற்றிய பேச்சினை அடுத்த வாரம் தள்ளிப் போடுவது நல்லது.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன சிக்கல்கள் வந்து டென்ஷனை கொடுக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு முன்னாடியே உங்களைப் பற்றி, புறம் கூற நாலு பேர் இருப்பாங்க. நண்பர்கள் போலத்தான் தெரிவார்கள். ஆனால் உங்களுக்கு நல்லது செய்ய மாட்டீங்க. முழுசாக மூன்றாவது நபரை நம்பாதிங்க. உங்கள் பொறுப்புகளை அவர்களிடம் ஒப்படைக்காதீங்க. உங்களுக்கு கெட்ட பெயர் வாங்கித் தரும் வேலையைத்தான் அவங்க பார்ப்பாங்க. உஷாராக இருந்தால் இன்று தப்பிக்கலாம்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வேலை சுமை கொஞ்சம் அதிகமாக இருக்கும். அலுவலகப் பணியை முழுசாக முடிக்க முடியாது. மேனேஜரிடம் திட்டு வாங்கினால் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை. பொறுமையோடு செயல்படுங்கள். உங்களுக்கு கொடுத்த வேலையை பொறுப்போடு முடியுங்கள். யாரையும் ஏமாற்றாதீர்கள். அரசாங்கத்துக்கு புறமான வேலையில் ஈடுபடாதீங்க. குறுக்கு வழியில் போகாதீங்க. சூதாட்டம் வேண்டாம். சிவ சிவ நாமத்தை சொல்லி நல்லது மட்டுமே நினைக்கவும்.