மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகமான நாளாக இருக்கும். செய்ய வேண்டிய விஷயங்களை எல்லாம் சரியாக செய்து முடிப்பீர்கள். உறவுகளுக்குள் நல்ல ஒற்றுமை நிலவும். பிரிந்து இருந்த கணவன் மனைவி ஒன்று சேர வாய்ப்புகள் உள்ளது. வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். வியாபாரத்தில் நினைத்ததை சாதித்து காட்டுவீர்கள். லாபம் அதிகரிக்கும். கடன் தொல்லை குறையும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று நினைத்தது ஒன்று, நடக்கக் கூடியது ஒன்றாக இருக்கும். நீங்கள் எவ்வளவுதான் முன்கூட்டியே பிளான் பண்ணாலும், உங்கள் பிளான் வொர்க் அவுட் ஆகாது. வாழ்க்கை அது போன போக்கில் தான் போகும். ஆகவே எதை நினைத்தும் கவலைப்படாதீர்கள். எல்லா வேலையிலும் கவனத்தோடு செயல்படுங்கள். அடுத்தவர்கள் சொல்வதை காதில் போட்டுக் கொள்ள வேண்டாம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று கூடுதல் பொறுப்புகள் இருக்கும். குடும்ப தலைவிகளுக்கு நிறைய வேலை இருக்கும். வீட்டில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். வியாபாரத்தில் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். வாய்ப்புகளை நழுவ விடாதீர்கள். கஷ்ட நஷ்டங்களை மனைவியுடன் மனம் திறந்து பகிர்ந்து கொள்ளுங்கள். சில விஷயங்களை பேசினாலே ஒரு நல்ல முடிவு கிடைத்துவிடும். பேசாமல் இருக்காதீர்கள்.
கடகம்
கடக ராசி காரர்களுக்கு இன்று குடும்பத்தின் மீது அக்கறை அதிகமாக இருக்கும். சின்ன சின்ன சண்டைகள் வரும், இருந்தாலும் ஏன் சண்டை போட்டோம் என்று யோசிப்பீங்க. மனது லேசாக வருத்தப்படும். கவலைப்படாதீங்க, இன்று மாலை எல்லா பிரச்சனைகளுக்கும் ஒரு முடிவு கிடைக்கும். மற்றபடி வியாபாரம் வேலை எல்லா விஷயத்திலும் நீங்கள் நினைத்த மாதிரி நல்லபடியா வேலை நடக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். நேரத்துக்கு சாப்பிடுங்க.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் டென்ஷன் ஆன நாளாக இருக்கும். ஆனால், எந்த பிரச்சனையுமே இருக்காது. நீங்க மட்டும் தான் டென்ஷனாக திரிந்து வருவீர்கள். அடுத்தவர்களை குடைச்சல் கொடுப்பீர்கள். உங்களைப் பார்த்தாலே அலறி அடித்து ஓட போறாங்க. நண்பர்கள் மனைவி உற்றார் உறவினர் எல்லோரும் தான். அந்த அளவுக்கு நீங்க இன்னைக்கு அடுத்தவங்களுக்கு தொல்லை கொடுப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. உங்க மனசு ஒரு நிலையாக இருக்காது. அலைபாய்ந்து கொண்டே இருக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று பாராட்டுகள் நிறைந்த நாளாக இருக்கும். என்றைக்கோ செய்த நல்லது இன்றைக்கு வந்து கை கொடுக்கும். மேலதிகாரிகள் உங்களைப் புரிந்து கொள்வார்கள். பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. தாய்மாமன் வழி உறவால் ஆதாயம் கிட்டும். கமிஷன் தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். கடன் பிரச்சனை குறையும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று பொறுமை கொஞ்சம் தேவை. எதிலும் அவசரப்படக்கூடாது. முக்கியமான முடிவுகளை எடுப்பதாக இருந்தால் நாளை தள்ளிப் போடுங்கள். இன்னும் முக்கியமான வேலையை இன்றைக்கே செய்ய வேண்டும் என்றால், பெரியோர்களின் ஆலோசனையை கேளுங்கள். குழப்பத்தில் யாரிடமும் பணம் கொடுக்காதீங்க. பணம் வாங்காதீங்க நிதானம் உங்களுக்கு இன்று நிம்மதியை தரும்.
விருச்சிகம்
விருச்சக ராசிக்காரர்களுக்கு இன்று ஏற்ற இறக்கங்கள் நிறைந்த நாளாக இருக்கும். இன்று காலை சிலபல பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை இருந்தாலும் மாலை மன நிறைவோடு குடும்பத்தோடு நேரத்தை செலவழிப்பீர்கள். மாலை கோவிலுக்கு செல்லக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். முடிந்தால் அம்பாள் கோவிலுக்கு சென்று வாருங்கள். மனநிறைவோடு நல்லது நடக்கும். தடைப்பட்டு வந்த சுப காரிய பேச்சு வீட்டில் மீண்டும் நடக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். நீங்கள் நினைத்ததை விட நற்பலன்கள் இன்று உண்டாகும். வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள். யாராவது வேலையை சொன்னால் அதை என்னவென்று செவிகளில் கேட்டுக் கொள்ளாமல் தட்டிக் கழிக்கக்கூடாது. கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்ல வேண்டும். வீட்டில் பெரியவர்களை உதாசீனப்படுத்தி பேசாதீங்க. மாமியார் மருமகள் உறவுக்குள் பிரச்சனை வர வாய்ப்பு உள்ளது.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று மனசு ரொம்ப ரொம்ப லேசாக இருக்கும். பாரத்தை எல்லாம் இறக்கி வைத்தது போல ஒரு இன்பம் இருக்கும். எதையோ சாதித்தது போல இருக்க போறீங்க. நல்லது மட்டும் தான் இன்னைக்கு நடக்கும். கவலை படாதீங்க வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு ஆதரவாக நண்பர்கள் இருப்பார்கள். வியாபாரத்தில் உங்களை தூக்கிவிட நிறைய பெரிய மனிதர்கள் ஆதரவு தெரிவிப்பார்கள். வாழ்க்கையை வாழ்ந்து விடலாம் என்ற புது நம்பிக்கை வரும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். சுறுசுறுப்பாக எல்லா வேலையையும் பம்பரம் போல சுழன்று சுழன்று செய்வீர்கள். உற்சாகம் நிறைந்த இந்த நாளில் பாராட்டுகள் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அலுவலகத்தில் நீங்கள் செய்த வேலைக்கு பாராட்டு கிடைக்கும். பதவி உயர்வு கிடைப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளது. பெரிய மனிதர்களின் நட்பு வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு துணையாக இருக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று சற்று மந்தமான நாளாக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே சண்டை சச்சரவுகள் வர வாய்ப்புகள் உள்ளது. யாராவது ஒருவர் விட்டுக் கொடுங்கள். பிரச்சனையை பெருசாக்காதீங்க விரிசல் பெருசாகிவிடும் ஜாக்கிரதை. மேலதிகாரிகளை அனுசரித்து செல்லவும். வேலை விஷயத்தில் பொய் சொல்லாதீங்க. பிரச்சனையே வந்தாலும் உண்மையை சொல்லி மாட்டிக் கொள்வது எதிர்காலத்தில் பிரச்சனை தவிர்க்கும்.