Tuesday, 12 December 2023

இன்றைய ராசிபலன் - 12.12.2023..!!!

SHARE


மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று செலவுகள் கொஞ்சம் அதிகமாக இருக்கும். எப்படியாவது வீண் செலவை குறைக்கப் பாருங்கள். கையில் இருக்கும் பணத்தை சேமிக்க பாருங்கள். இல்லையென்றால் மாசக் கடைசியில் பிரச்சனை வந்துவிடும். மற்றபடி செய்யும் வேலை தொழில் எல்லாவற்றிலும் மன நிம்மதி இருக்கும். மன நிறைவாக உங்களுடைய வேலையை செய்வீர்கள். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று உடல் ஆரோக்கியத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. ஆரோக்கியத்தில் பிரச்சினை வந்தால், உடனடியாக மருத்துவரை அணுகவும். நீங்களே உங்களுக்கு வைத்தியம் பாத்துக்காதீங்க. மெடிக்கல் ஷாப்பில் மருந்து வாங்கி சாப்பிடாதீங்க. அது பிரச்சினையை கொடுத்து விடும். பண வரவு சீராக இருக்கும். வரா கடன் வசூல் ஆகும். தேவையற்ற மனிதர்களின் உறவுகள் விட்டுப் போகும் நல்லதே நடக்கும்.

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சின்ன சின்ன பிரச்சனைகள் வரும். தேவையற்ற மனிதர்கள் உங்களை தரை குறைவாக பேசுவதற்கும் வாய்ப்புகள் உள்ளது. அடுத்தவர்கள் முன்பு தலைகுனியக்கூடிய சூழ்நிலை உண்டாகலாம். ஆனால் அதை நினைத்து கவலை படாதீங்க. உங்கள் மேல் தவறு இல்லை. நீங்கள் எந்த தவறும் செய்யவில்லை என்றால், அமைதியாக இருந்து விடுங்கள். பிரச்சனை தானாக சரியாகும். உங்கள் மேல் விழுந்த பழி தானாக விலகும்.

கடகம்


கடக ராசி காரர்களுக்கு இன்று கொஞ்சம் மனது சோர்வாக இருக்கும். எந்த வேலையும் சுறுசுறுப்பாக ஓடாது. நீங்கள் எடுத்த முடிவு சரியா தவறா என்பதில் மனக்குழப்பத்தோடு இருப்பீர்கள். கவலைப்படாதீங்க உங்களுக்கு எல்லாம் நல்லது நடக்கும். கடவுளின் ஆசிர்வாதம் இருக்கும். அனாவசியமாக குழம்பிக் கொள்ள வேண்டாம். உங்களுடைய வேலையை கவனத்தோடு செய்தால் நிச்சயம் நல்லது நடக்கும். நேரத்தை வீணாக்கும் படி எந்த விஷயத்திலும் மனதை ஈடுபடுத்தாதீர்கள். குறிப்பாக கைபேசி பார்ப்பது, டிவி பார்ப்பது இப்படி மனதை அலைபாய விடாமல் வேலையில் முழு கவனத்தையும் செலுத்தவும்.

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று மன நிறைவான நாளாக இருக்கும். நினைத்தது நடக்கும். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் லாபம் இருக்கும். கமிஷன் தொழில் செய்பவர்களுக்கு பாக்கெட் நிரம்பும். வாங்கிய கடனை எல்லாம் திருப்பிக் கொடுத்து விடுவீர்கள். பெரியவர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். இன்று மாலை குடும்பத்தோடு வெளியிடங்களுக்கு சென்று நேரத்தை செலவு செய்வீர்கள்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று சூழ்நிலை கொஞ்சம் சுமாராகத் தான் இருக்கும். உங்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும் சில வேலைகளை இன்று நீங்கள் செய்துதான் ஆக வேண்டும். அதற்கான கட்டாயத்தை ஏற்படுத்தி விடுவார்கள். உங்களை சுற்றி இருப்பவர்கள் உங்களுக்கு உபத்திரவமாக ஏதாவது செய்து கொண்டே இருப்பார்கள். அவர்களை சமாளிப்பது பெரிய கஷ்டமாக இருக்கும். இன்றைய நாளை நீங்கள் சமாளிக்க வேண்டும் என்றால் எல்லா பிரச்சனைக்கும் மௌனம் பதிலாக இருக்கட்டும். எல்லாம் சரியாகிவிடும்.

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்காலத்துக்கு தேவையான நிறைய நல்லது நடக்கும். எதிர்கால சேமிப்புக்கு உண்டான வழியை கண்டுபிடித்து உங்கள் குடும்பத்திற்கு ஒரு நல்லதை செய்ய போறீங்க. வேலை செய்யும் இடத்தில் மேல் அதிகாரிகள் உங்களுக்கு சின்ன தொந்தரவு கொடுக்க வாய்ப்புகள் உள்ளது. எதிர்த்து பேச வேண்டாம். உயர் அதிகாரிகளை அனுசரித்து செல்லுங்கள். சொல்லக்கூடிய வேலையை கூடுமானவரை முடிக்க பாருங்கள். நல்லதே நடக்கும்

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல ஓய்வு கிடைக்கும். வேலைக்கு செல்பவர்களாக இருந்தாலும் உங்களுக்கு அதில் பெரிய சிரமம் இருக்காது. ரொம்ப ரொம்ப நிம்மதியோடு சந்தோஷத்தோடு வேலையை முடித்து வீடு திரும்புவீங்க. வீட்டில் நல்ல சாப்பாடு சந்தோஷமான குடும்பம் என்று நல்ல வாழ்க்கை இன்றைக்கு உங்களுக்கு கிடைக்கும். சேல்ஸ்மேன் வேலையில் இருப்பவர்களுக்கு டார்கெட் பிரச்சினை இருக்கும். சில பேருக்கு நிதி சம்பந்தப்பட்ட பிரச்சனை இருக்கும் கொஞ்சம் சமாளிக்கவும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று ஆரோக்கியம் நிறைந்த நாளாக இருக்கும். உங்கள் மனமும் உடம்பும் ரொம்ப ரொம்ப புத்துணர்ச்சியோடு செயல்படும். எந்த பிரச்சினையை நினைத்து கவலைப்பட மாட்டீங்க. பிரச்சனையே இருக்காது என்று சொல்லவில்லை. பிரச்சனை இருந்தாலும் அது ஒரு பக்கம் இருக்கட்டும். இன்று உங்களுடைய வேலையை நீங்கள் பார்த்துக் கொண்டே இருப்பீர்கள். யார் என்ன சொன்னாலும் அதை மூளைக்கு கொண்டு செல்ல மாட்டீங்க. இன்றைய வாழ்க்கையில் உங்களுக்கு நீங்கள் தான் ராஜா என்ஜாய் பண்ணுங்க.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். நீண்ட நாள் பிரிந்த உறவு, நண்பர்களின் மூலம் சந்தோஷம் கிடைக்கும். பிரிந்த காதலியை கூட சந்திக்க வாய்ப்பு உள்ளது. உங்களுக்கு லக் இருந்தால் இன்று என்ன நடக்குதுன்னு பார்க்கலாம். மற்றபடி வேலையில் இருந்த தடைகள் வியாபாரத்தில் இருந்து தடைகள் எல்லாம் சரியாகும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று நன்மை தரக்கூடிய நாளாக தான் இருக்கும். அடுத்தவர்களுக்கு உதவி செய்து மன நிறைவை அடைவீர்கள். குடும்பத்தில் மாமனார் வழி உறவில் சின்ன சின்ன சிக்கல்கள் வர வாய்ப்புகள் உள்ளது. உறவுகளை நாசுக்காக கையாள வேண்டும். முன்கோபத்தை அவர்களிடம் காட்டக் கூடாது. உறவுகள் என்பது கண்ணாடி பாத்திரம் போல உடைத்து விட்டால், ஒட்ட வைக்க முடியாது. ஜாக்கிரதையா இருந்துக்கோங்க. மனைவியின் பேச்சுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் நல்லது நடக்கும்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். பண வரவு அதிகரிக்கும். நிறைய காசு இருக்குதுன்னு அனாவசியமா அடுத்தவர்களுக்கு பணம் கொடுக்காதீங்க. பிறகு சிக்கலில் மாட்டிக் கொள்வீர்கள். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்கவும். வேலை செய்யும் இடத்தில் கொஞ்சம் பிரஷர் இருக்கும். டார்கெட்டை முடிக்க சொல்லி கட்டாயப்படுத்துவார்கள். வேறு வழி கிடையாது மேனேஜர், டீம் லீடர் சொல்வதை கேட்டு தான் ஆக வேண்டும். எதிர்த்து பேசாதீங்க புதிய வேலை கிடைப்பது குதிரை கொம்பு நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
SHARE