இன்றைய ராசிபலன் - 11.12.2023..!!!
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மன நிறைவான நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் மன திருப்தி ஏற்படும். உங்களை புரிந்து கொள்ளாமல் பிரச்சனை செய்து கொண்டிருந்த மேனேஜர், டீம் லீடர் எல்லோரும் உங்களுக்கு அனுசரணையாக நடந்து கொள்வார்கள். ஆரோக்கியத்தில் நல்ல மேம்பாடு இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு முக்கிய முடிவுகள் எடுப்பதில் என்று சில குழப்பங்கள் வரும். சின்ன சின்ன பிரச்சனைகளை கூட சமாளிக்க முடியாமல் மனசு கஷ்டப்படுவீர்கள். எது நடந்தாலும் கவலை படாதீங்க. அதுபோன போக்கில் விட்டு விடுங்கள். இறைவனை பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். முக்கியமான விஷயங்களை இன்று செய்வதாக இருந்தால் அதை நாளை தள்ளிப் போடுங்கள். சொத்து பிரச்சனை, பண பரிவர்த்தனை இவைகளை நாளை பார்த்து கொள்ளலாம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று வியாபாரத்தில் சின்ன சின்ன சிக்கல்கள் வரும். பெரிய தொழில் அதிபர்கள் முதல், சின்ன சின்ன வியாபாரிகள் வரை பண பரிவர்த்தனையில் அக்கறை காட்ட வேண்டும். கடனுக்கு வியாபாரம் செய்யக்கூடாது. கணவன் மனைவிக்கிடையே சின்ன சின்ன சிக்கல்கள் வரும். குடும்பத்தில் குழப்பம் ஏற்படும். மனதை ஆன்மீகத்தில் ஈடுபடுத்துங்கள். கடவுளை முழுசாக நம்புங்கள் நல்லது நடக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பான நாளாக இருக்கும். அடுத்த இரண்டு மூன்று நான்கு நாட்களுக்கு தேவையான வேலையை கூட இன்றே செய்ய ப்ளான் பண்ணுவீங்க. அலுவலகத்தில் நல்ல பெயர் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய யுக்திகளை அறிமுகம் செய்து நல்ல லாபத்தை ஈட்டுவீர்கள். பிள்ளைகளால் மனது சந்தோஷம் அடையும். பெரியவர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று பொறுப்புகள் கொஞ்சம் கூடுதலாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் இரண்டு மூன்று பேர் வேலையை மொத்தமாக நீங்கள் செய்ய வேண்டிய சூழ்நிலை இருக்கும். தலைவலி வரும். ஓய்வு எடுக்க கூட நேரம் இருக்காது. மதிய சாப்பாடு கூட சாப்பிட முடியாத சூழ்நிலை சில பேருக்கு இருக்கும். பதட்டம் அடையாதீர்கள். பொறுமையாக வேலையை பாருங்கள். உங்களால் முடிந்ததை செய்யுங்கள். முடியாததை இழுத்து தலையில் போட்டுக்கொள்ள வேண்டாம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று உறவுகளுக்கு இடையே இருந்து வந்த பிரச்சனைகளுக்கு ஒரு முடிவு கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். வேலை செய்யும் இடத்திலிருந்து பிக்கள் பிடுங்கள் எல்லாம் சரியாகிவிடும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்த புதிய கடன் வாங்கலாம். வங்கியில் கடன் முயற்சி செய்தால் கிடைப்பதற்கு நிறையவே வாய்ப்புகள் உள்ளது. வாகனங்களில் செல்லும்போது கூடுதல் கவனம் இருக்கட்டும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று கவன குறைவு அதிகமாக இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்கள் சமையலின் போதும் கவனம் செலுத்த வேண்டும். வேலை செய்பவர்கள் தங்களுடைய வேலையில் அதிக அக்கறை காட்ட வேண்டும். வெளியில் சென்றால் வண்டி ஓட்டும் போது காதில் ஹெட்போன் போட வேண்டாம். மாமியார் மருமகள் உறவில் சின்ன சின்ன சிக்கல்கள் ஏற்படும். உறவுகளோடு கவனமாக பேச வேண்டும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று நீண்ட நாள் பிரச்சனை ஒரு முடிவுக்கு வரும். மனதில் தேக்கி வைத்திருந்த எல்லா பாரத்தையும் கீழே இறக்கி வைப்பீர்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பொன் பொருள் சேர்க்கை இருக்கும். நன்மை நடக்கக்கூடிய நாளாக அமையும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று திறமைகள் வெளிப்படக்கூடிய நாளாக இருக்கும். சிக்கலான பிரச்சனைகளை கூட சுலபமாக சரி செய்து பாராட்டை பெறுவீர்கள். பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. முன்பின் தெரியாத நபரை நம்ப வேண்டாம். குடும்ப விஷயங்களை அடுத்தவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம். மனைவியிடம் பொய் சொல்ல வேண்டாம்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல பெயர் கிடைக்கும். நீங்கள் எதுவுமே செய்யாமல் பாராட்டை தட்டிச் செல்வீர்கள். எதனால் இவர்கள் நம்மை பாராட்டுகிறார்கள் என்று உங்களுக்கே புரியாது. வீட்டில் தடைப்பட்டு வந்த சுபகாரியங்கள் மீண்டும் நடக்கும். மகிழ்ச்சியில் மனது நிறைவாக இருக்கும். கணவன் மனைவி அன்பு அதிகரிக்கும். நீண்ட நாள் சொத்து பிரச்சனை ஒரு முடிவுக்கு வரும். பண வரவு இன்னும் கொஞ்சம் சந்தோஷத்தை அதிகப்படுத்தும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் குழப்பம் நிறைந்த நாளாக இருக்கும். எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியாது. தலைவலி இருக்கும். பிரச்சனைகளை சமாளிக்க கொஞ்சம் சிரமப்படுவீர்கள். பொறுமையாக கையாளுங்கள். முன் கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். அடுத்தவர்களை உதாசீனப்படுத்த வேண்டாம். மனதை ஐந்து நிமிடம் தியான நிலையில் வைத்து விட்டு பிறகு ஒரு முடிவை எடுக்கவும். அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க கூடாது.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். பண வரவு இருக்கும். நிதிநிலைமை மேம்படும். சந்தோஷத்தில் கொஞ்சம் அதிகமாகவே செலவு செய்வீங்க. பார்த்துக்கோங்க பிறகு மாத கடைசியில் அடுத்தவர்களிடம் கை நீட்ட வேண்டிய சூழ்நிலை உண்டாகும். செலவை கட்டுப்படுத்தவும். உங்களுடைய அந்தரங்க விஷயங்களை அனாவசியமாக அடுத்தவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். ஒரு வேலையை ஆரம்பிப்பதற்கு முன்பே அடுத்தவர்களிடம் சொல்லுவது உங்களுக்கு ஆப்பு வைத்து விடும் ஜாக்கிரதை.