இந்த வார ராசிபலன் 11.12.2023 முதல் 17.12.2023 வரை..!!!
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் தொட்டது தொடங்கும் வாரமாக திகழப் போகிறது. எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். ஒரு சிலருக்கு திடீர் பணவரவால் மகிழ்ச்சி உண்டாகும். உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். ஒற்றுமை அதிகரிக்கும். இருப்பினும் கோபத்தை தவிர்த்துக் கொள்வது நன்மையை தரும். ஒரு சிலருக்கு திடீர் அதிர்ஷ்டம் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். அதை திறம்பட செய்து முடிப்பதன் மூலம் உயர் அதிகாரிகளின் கோபத்தில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். தொழிலைப் பொருத்தவரை லாபம் சுமாராக தான் இருக்கும். புதிதாக தொழில் தொடங்க நினைப்பவர்கள் தங்கள் முயற்சிகளை மேற்கொள்ளலாம். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு அனுமனை வழிபட வேண்டும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சுப காரியங்கள் நடைபெறும் வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை திருப்திகரமாக இருக்கும். உடல்நலம் சீராக இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். கூடா நட்பால் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் கவனமாக இருக்க வேண்டும். எந்த செயலிலும் பதற்றத்தோடு செய்யாமல் நிதானமாக செய்வது நன்மையை ஏற்படுத்தும்.
வேலையை பொருத்தவரை அனுகூலமான வாரமாகவே திகழ்கிறது. எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்புகள் இருக்கிறது. ஒரு சிலருக்கு புதிய வேலை தொடர்பான விஷயங்கள் வெற்றியைத் தரும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் இருக்காது. அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்காமல் ஆலோசித்து எடுப்பது நன்மையை தரும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு துர்க்கை அம்மனை வழிபட வேண்டும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அதிர்ஷ்டகரமான வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த பணவரவு ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறிது கவனம் தேவை. கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். ஒற்றுமை அதிகரிக்கும். ஒரு சிலருக்கு திடீர் அதிர்ஷ்டம் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.
வேலையை பொருத்தவரை வேலை சுமை குறைவாகவே இருக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். ஒரு சிலருக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்க வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்ததை விட லாபம் அதிகமாக கிடைக்கும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்கள் வெற்றியைத் தரும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு முருகப்பெருமானை வழிபட வேண்டும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் தடைகள் நீங்கும் வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த பணவரவு ஏற்படும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து அனுசரித்து செல்வது நன்மை தரும். பயணங்கள் மேற்கொள்ளும் பொழுது கவனம் தேவை.
வேலையை பொருத்தவரை ஓரளவுக்கு சாதகமான சூழ்நிலையை தென்படும். உயர் அதிகாரிகளிடம் பேசும் பொழுது கவனமாக பேச வேண்டும். மறைமுக எதிரிகளால் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்ததை விட லாபம் அதிகமாகவே கிடைக்கும். இதுவரை தொழிலில் இருந்து வந்த சிக்கல்கள் அனைத்தும் நீங்கும். இருப்பினும் உடன் இருப்பவர்களின் செயல்பாட்டில் கவனம் செலுத்துவது நன்மையை தரும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு சிவபெருமானை வழிபட வேண்டும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் செல்வாக்கு உயரும் வாரமாக திகழப்போகிறது. எதிர்பார்த்ததை விட பண வரவு அதிகமாக கிடைக்கும். எதிர்பாராத பணவரவிற்கு வாய்ப்புகள் இருக்கிறது. உடல் நலனில் கவனம் தேவை. குடும்பத்தில் வாக்குவாதம் செய்வதை தவிர்ப்பது நன்மை தரும். கணவன் மனைவிக்கு இடையே கோப தாபங்கள் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது நன்மை தரும்.
வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாக இருக்கும். அதை பொறுமையுடன் கையாளுவதன் மூலம் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலைப் பொருத்தவரை உழைப்பிற்கு ஏற்ற லாபமே கிடைக்கும் என்பதால் லாபத்திற்காக கூடுதலாக உழைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். தொழிலின் முன்னேற்றத்திற்காக முயற்சிகளை மேற்கொள்வீர்கள். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு பைரவரை வழிபட வேண்டும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் யோகமான வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை பணவரவு தாராளமாக இருக்கும். ஒரு சிலருக்கு எதிர்பாராத அதிர்ஷ்டமும் பணவரவும் கிடைக்க வாய்ப்புகள் இருப்பதால் பழைய கடன்கள் நீங்கும். புதிய சொத்து வாங்கும் யோகம் உண்டாகும். உடல்நலம் சீராக இருக்கும். இதுவரை இருந்து வந்த கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.
வேலையை பொருத்தவரை வேலை சுமை குறைவாகவே இருக்கும். வேலையில் இருந்து வந்த தடைகள் நீங்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்ததை விட கூடுதலான லாபம் கிடைக்க வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. அதனால் தொழிலை திறம்பட செயல்படுத்த இருந்து வந்த தடைகள் அனைத்தும் நீங்கும். மேலும் புதிய தொழில்கள் ஆரம்பிக்கும் யோகமும் உண்டாகும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு விநாயகப் பெருமானை வழிபட வேண்டும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வெற்றிகரமான வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை திருப்திகரமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்தி வருவதற்குரிய வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது. கணவன் மனைவிக்கு இடையே சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டு மறையும்.
வேலையை பொருத்தவரை வேலை சுமை குறைவாகவே இருக்கும். வேலையில் இருந்து வந்த மறைமுக பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். ஒரு சிலருக்கு விரும்பிய இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. தொழிலை பொருத்தவரை எதிர் பார்த்ததைவிட லாபம் சற்று கூடுதலாகவே இருக்கும். தொழிலில் இருந்து வந்த பிரச்சினைகள் நீங்கும். புதிய முயற்சிகள் வெற்றி அடையும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு பெருமாளை வழிபட வேண்டும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் ஏற்ற மிகுந்த வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்ததை விட பணவரவு அதிகமாகவே இருக்கும். உடல் நலனில் கவனம் தேவை. பிறரிடம் பேசும் பொழுது வார்த்தைகளை கவனமாக உபயோகிக்க வேண்டும். கணவன் மனைவிக்கிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகள் வராமல் தவித்துக் கொள்ளலாம்.
வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாகவே இருக்கும். யாரையும் நம்பி வேலையை ஒப்படைக்காமல் தாமே செய்வது நன்மையை தரும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்ததை விட லாபம் அதிகமாக கிடைக்கும். தொழிலை முன்னேற்றுவதற்காக ஒரு சிலர் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்படும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு ராகவேந்திரரை வழிபட வேண்டும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மகிழ்ச்சிகரமான வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை திருப்திகரமாக இருக்கும். உடல் நலம் சீராக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். செலவுகள் அதிகம் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் அதை சுப விரயமாக மாற்றுவது நன்மை தரும்.
வேலையை பொருத்தவரை சாதகமான சூழ்நிலையே நிலவுகிறது. இருப்பினும் உயர் அதிகாரிகளிடம் பொறுமையை கையாளுவது நன்மை தரும். புதிய வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்க வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. தொழிலை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்காது. புதிய முயற்சிகள் செய்வதை தற்சமயம் தள்ளி வைப்பது நன்மையை தரும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு நரசிம்மரை வழிபட வேண்டும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கஷ்டம் நீங்கும் வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். அதற்கேற்ற செலவுகளும் ஏற்படும். உடல் நலத்தில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். ஒரு சிலருக்கு திடீர் அதிர்ஷ்டம் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.
வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று கூடுதலாகவே இருக்கும். இருப்பினும் அதை திறம்பட செய்து எதிர்பார்த்த சலுகைகளை பெறுவீர்கள். தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்து அளவிற்கு லாபம் கிடைக்கும். தொழிலை முன்னேற்றுவதற்காக மேற்கொண்ட முயற்சிகளுக்கு நல்ல சாதகமான பதில் கிடைக்கும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு உக்கிர தெய்வ வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நிதானமாக செயல்பட வேண்டிய வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை பணவரவு அதிகமாகவே இருக்கும். அதனால் பணப் பிரச்சனைகள் நீங்க வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. உடல் நலத்தில் கவனம் தேவை. சுப காரியம் தொடர்பான நல்ல செய்திகள் தேடி வரும். எந்த வேலையை செய்வதாக இருந்தாலும் பதட்டத்தை தவிர்ப்பது நன்மை தரும். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் விஷயத்தில் கவனம் தேவை.
வேலையை பொருத்தவரை வேலை சுமை குறைவாகவே இருக்கும். புதிய வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலையில் முன்னேற்றம் ஏற்படும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். இதுவரை இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் அனைத்தும் நீங்கி தொழிலை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்வீர்கள். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு சிவபெருமானை வழிபட வேண்டும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சற்று கவனமாக இருக்க வேண்டிய வாரமாக திகழப் போகிறது. பொருளாதரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். ஒரு சிலருக்கு எதிர்பாராத பணவரவு ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகளும் சிக்கல்களும் நீங்கும் சூழ்நிலை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறிது கவனம் தேவை. சுப காரியங்கள் நடைபெறுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும்.
வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். உடன் பணிபுரிபவர்களின் ஆதரவால் வேலையை செம்மையாக செய்து முடிப்பீர்கள். அதனால் பல சலுகைகளையும் பெறுவீர்கள். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த லாபம் கிடைக்கும். இருப்பினும் தேவையற்ற எந்த ஒப்பந்தங்களிலும் கையெழுத்திடுவதை தவிர்ப்பது நன்மை தரும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு முருகப்பெருமானை வழிபட வேண்டும்.