எரிபொருள் விலை 11 சதவீதம் அதிகரிக்கும்..!!!
ஜனவரி முதலாம் திகதி முதல் நாட்டில் எரிபொருள் விலையானது 11 சதவீதத்தினால் அதிகரிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபன பணியாளர்கள் சங்கத்தின் தலைவர் அசோக ரன்வல இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசங்கம் அடுத்தாண்டு பெறுமதி சேர்க்கப்பட்ட வரியை 15 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக அதிகரிக்க தீர்மானித்துள்ளது.
அவ்வாறு அதிகரிக்கப்படும் போது, அதன் தாக்கம் எரிபொருள் விலைகளிலும் ஏற்படும் என்பதோடு, எரிபொருள் இறக்குமதி செலவினம் அடுத்த ஆண்டு 10.5 சதவீதத்தினால் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவற்றின் அடிப்படையில் ஜனவரி மாதம் 1ம் திகதியுடன் நாட்டில் எரிபொருள் விலையானது 11 சதவீதத்தினால் அதிகரிக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.