Friday, 8 December 2023

இன்றைய ராசிபலன் - 08.12.2023..!!!

SHARE


மேஷம்


மேஷ ராசிக்காரர்கள் இன்றைய நாளில் நினைத்ததெல்லாம் நடக்க வேண்டும் என்று போராடி வெற்றி காண்பீர்கள். இருந்தாலும், வெற்றியின் மீது இருக்கும் ஆசை உங்களுக்கு அடங்காது. நிறைய பாராட்டுக்கள் கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். நீண்ட நாள் கனவு நிறைவேற கூடிய இந்த நாளில் குல தெய்வத்துக்கு நன்றி சொல்லுங்கள். வாகனங்களில் செல்லும்போது கவனத்தோடு இருக்கவும். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்தவும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மனக் கவலையான நாளாக இருக்கும். எந்த வேலையிலும் மனது ஈடுபடாது. கொஞ்சம் சுறுசுறுப்பு இல்லாத தன்மை இருக்கும். அவ்வளவுதான். பெரியதாக பாதிப்பு கிடையாது. மனதை ஒருநிலைப்படுத்தி வேலை செய்துதான் ஆக வேண்டும் என்று மூளைக்கு உத்தரவு இடுங்கள். நிச்சயம் வேலை நல்லபடியாக நடக்கும். கவனத்தை சிதற விடக்கூடாது. தாய்மாமன் வழி உறவால் ஆதாயம் கிட்டும். பொறுப்புகள் அதிகரிக்கும்.

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று வேலை பளு கொஞ்சம் அதிகமாக இருக்கும். இந்த நாள் முழுவதும் ஓடிக்கொண்டே இருப்பீர்கள். உட்கார சாப்பிட கூட நேரம் இருக்காது. கொஞ்சம் அலைச்சல் நிறைந்த இந்த நாளில் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். சில பேருக்கு இந்த நாள் இறுதியில் தலை பாரம் உடல் சோர்வு வாந்தி மயக்கம் ஏற்படும் ஜாக்கிரதை. கணவன் மனைவி இடையே சின்ன சின்ன பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது. எந்த சூழ்நிலையிலும் மனைவியிடம் பொய் சொல்ல வேண்டாம்.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று பாராட்டுகள் கிடைக்கும் நாள். வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய திறமையை பார்த்து மூக்கின் மேல் விரலை வைக்கும் அளவுக்கு சில சம்பவங்கள் நடக்கும். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கோங்க. வேலையில் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து செல்ல சில வாய்ப்புகள் வரும். முன்னேற்றத்திற்கு வரும் நல்லதே நழுவ விட வேண்டாம். நிதிநிலைமை சீராகும். வாரா கடன் வசூல் ஆகும்.

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குழப்பம் இல்லாத நாளாக இருக்கும். பிரச்சனைகள் வந்தாலும் தெளிவாக முடிவு எடுப்பீங்க. பேருந்தில் பயணம் செல்லும் போது கவனமாக இருக்கவும். வீட்டில் இருக்கும் பெண்கள் சமையலறையில் கூர்மையான ஆயுதங்களை பயன்படுத்தும் போது கவனம் தேவை. வாகனம் ஓட்டுபவர்களுக்கும் கவனம் தேவை. சின்ன சின்ன ரத்த காயம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. எவ்வளவு பெரிய பொறுப்பை கொடுத்தாலும் அதை சுலபமாக செய்து முடித்து விடுவீர்கள். விவசாயிகளுக்கு புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். கட்டுமான தொழில் செய்பவர்களுக்கு வேலையில் சின்ன சின்ன பிரச்சனை வரலாம். ஜாக்கிரதையாக இருந்துக்கோங்க. சுப காரிய நிகழ்ச்சிகள் பற்றிய பேச்சினை வீட்டில் தொடங்கலாம். சகோதரர்கள் உங்களுக்கு ஆதரவு தெரிவிப்பார்கள்.

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றிக்கான கூடிய நாளாக இருக்கும். புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். தொழிலை விரிவு படுத்தலாம். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். ஆரோக்கியத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. உங்களுடைய வீட்டில் முதியவர்கள் இருந்தால் அவர்களை ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ளுங்கள். சகோதரர் சகோதரி பாசம் வெளிப்படும். குடும்ப பிரச்சனை தீரும்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனது ஆன்மீகத்தில் இருக்கும். கோவிலுக்கு செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். இன்றைய நாள் சுறுசுறுப்பாக வேலை தொடங்கும். வேலை செய்யும் இடத்தில் உடன் வேலை செய்பவர்களால் சில பேருக்கு பிரச்சினைகள் வர வாய்ப்பு உள்ளது. மூன்றாவது நபரை முழுசாக நம்ப வேண்டாம். முன்பின் தெரியாத நபரிடம் குடும்ப விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

தனுசு


தனுசு ராசிக்காரர்கள் இன்று அடம்பிடித்து எந்த வேலையும் செய்யக்கூடாது. பெரியவர்கள் சில விஷயங்களை வேண்டாம் என்று சொன்னால், விட்டு விடுங்கள். பிடிவாத குணம் உங்களுக்கு இன்று பிரச்சினையை கொடுத்து விடும். அரசாங்க ஊழியர்கள் நேர்மையாக நடந்து கொள்ளவும். குறுக்கு வழியில் செல்ல வேண்டாம். பிறகு வேலைக்கு பிரச்சினையாகிவிடும் ஜாக்கிரதை. வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். சில பேருக்கு கடன் பிரச்சனையால் துன்பம் நேரலாம்.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று ஏற்ற இறக்கங்கள் நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய வேலையை எந்த குறையும் இல்லாமல் கவனத்தோடு செய்து முடித்து விடுங்கள். பிரச்சனை என்று வந்தால் பார்த்துக் கொள்ளலாம். சோம்பேறித்தனத்தோடு இருக்கக் கூடாது. இன்னைக்கு செய்யக்கூடிய வேலையை நாளைக்கு செய்து கொள்ளலாம் என்று தள்ளி போடக்கூடாது. கூடுமானவரை நேரத்திற்கு முன்பாகவே வீட்டில் இருந்து கிளம்புங்க. கடைசி நிமிஷம் வரை வேலையை இழுக்காதீங்க.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று அலட்சியப் போக்கினால் சின்ன சின்ன பிரச்சனைகள் வரலாம். கவனக்குறைவின் காரணமாக நீங்கள் சில தவறுகளை செய்ய வாய்ப்புகள் உள்ளது. எல்லா விஷயத்திலும் அக்கறையுடன் நடந்து கொள்ளுங்கள். மனசு சரியில்லை என்றால் அந்த வேலையை கையில் எடுக்காதீங்க. அரைகுறை மனதோடு செய்யக்கூடிய வேலை உங்களுக்கு இன்று பிரச்சினையை கொடுக்கும். குடும்பத்தில் சந்தோஷம் மன நிறைவோடு இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று வேலையில் கொஞ்சம் அலைச்சல் இருக்கும். நீண்ட தூர பயணம் வெற்றியை கொடுக்கும். உடல் சோர்வு ஏற்படும். நேரத்துக்கு உணவு சாப்பிடும் பழக்கத்தை வைத்துக் கொள்ளவும். உடல் பருமனாக இருப்பவர்கள் உடல் பயிற்சி செய்து எடையை குறைப்பது நல்லது. ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை வரும். வாழ்க்கை துணை பேச்சை கேட்டு நடக்க வேண்டும். உறவுகளை எதிர்த்துக் கொள்ள வேண்டாம்.

SHARE