இன்றைய ராசிபலன் - 07.12.2023..!!!
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இன்று எல்லா விஷயத்திலும் கூடுதல் கவனத்தோடு நடந்து கொள்ள வேண்டும். எச்சரிக்கையாக இல்லை என்றால் ஏமாந்து போவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். சத்துள்ள பொருட்களை மட்டும் சாப்பிடுங்கள். வெளியிடங்களில் ஜங்க் ஃபுட்டை தவிர்க்கவும். அடுத்தவர்களுக்கு உதவி செய்வது நல்லது. ஆனால் இன்று நீங்கள் தனக்கு போகத்தான் தானமும் தர்மமும் என்ற வார்த்தைகளை நினைவில் வச்சுக்கணும். அப்போதுதான் நல்லது நடக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு மனது இன்று கொஞ்சம் சோர்வாக இருக்கும். எந்த வேலையிலும் சுறுசுறுப்பு இருக்காது. எதிலும் அதிகமாக ஆர்வம் காட்ட மாட்டீங்க. குழந்தைகளுக்காக கொஞ்சம் பணத்தை செலவு செய்ய வேண்டிய சூழ்நிலை சில பேருக்கு ஏற்படும். சில பேருக்கு பணம் இல்லாமல் கடன் வாங்கக் கூடிய சூழ்நிலை ஏற்படும். சின்ன சின்ன சிக்கல்கள் செய்யக்கூடிய வேலையில் வரலாம். அனுசரித்து செல்லுங்கள். முன் கோபப்பட வேண்டாம். புதிய வேலை கிடைப்பது குதிரை கொம்பு ஞாபகத்தில் வச்சுக்கோங்க.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன பிரச்சனைகள் வரும். நீங்கள் அமைதியாகவே இருந்தாலும் வம்புக்கு இழுக்க நாலு பேர் வருவாங்க. அவங்கள பத்தி கவலைப்படாதீங்க. பதிலுக்கு நீங்க அவங்களோடு இறங்கி சண்டை போடாதீங்க. உங்களுடைய பெயர்தான் கெட்டுப் போகும். நல்ல மனிதர்களின் சவகாசம் இன்று உங்களுக்கு நன்மையை கொடுக்கும். கெட்ட மனிதர்களின் சவகாசம் உங்கள் பெயரை கெடுக்கும் ஜாக்கிரதை.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று நிறைய நல்ல விஷயங்கள் நடக்கப் போகின்றது. மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். நீண்ட நாள் சொத்து பிரச்சனை ஒரு முடிவுக்கு வரும். தேவையற்ற மூன்றாவது மனிதர்கள் உங்களுடைய நிம்மதியை கெடுக்க சில வார்த்தைகளை பேசுவார்கள். அதையெல்லாம் காதல் போட்டுக் கொள்ள வேண்டாம். அக்கம் பக்கம் வீட்டில் இருப்பவர்களோடு அமர்ந்து புறம் பேச வேண்டாம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியான நாளாக இருக்கும். அலுவலகம் வியாபாரம் எதிலும் பெரிய அளவில் பிரச்சனைகள் வராது. அன்றாட வேலையை சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். வீட்டில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். சுப செலவு ஏற்படும். இன்று மாலை குடும்பத்தோடு வெளியிடங்களுக்கு செல்வீர்கள். மனது அமைதி பெறும். ஆரோக்கியத்தில் நல்ல மேம்பாடு இருக்கும். நீண்ட தூர பயணம் வெற்றியை கொடுக்கும்.
கன்னி
கன்னி ஸராசிக்காரர்களுக்கு இன்று மனது ஆன்மீகத்தை நாடும். புதிய நண்பர்களின் அறிமுகம் நல்லதை நடத்தும். உணவு விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். அளவோடு சாப்பிடுங்கள். ஆரோக்கியத்தோடு சாப்பிடுங்கள். நேரத்துக்கு சாப்பிடுங்கள். பொருளாதார ரீதியாக சில பேருக்கு பிரச்சனைகள் வர வாய்ப்புகள் உள்ளது. கந்துவட்டி வாங்காதீங்க. செலவை குறைக்கவும். சேமிப்பை உயர்த்தவும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று அதிரடியான நாளாக இருக்கப் போகின்றது. யாருக்கும் பயப்பட மாட்டீங்க. மனசு துணிச்சலோடு செயல்படும். வெட்டு ஒன்று, துண்டு துண்டு இரண்டு என்று பேசி பிரச்சனைகளை ஒரு முடிவுக்கு கொண்டு வருவீங்க. உங்களைப் பார்த்தாலே எதிரிகள் நடுநடுங்குவார்கள். இன்றைய நாள் உங்களுக்கு பட்டாசு வெடிக்கும் வாழ்க்கை தான். சந்தோஷமா என்ஜாய் பண்ணுங்க. மனைவியிடம் பொய் சொல்லாதீங்க.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று நேரம் வீணாகும். யாரிடமாவது கதை பேசி நேரத்தை கழிப்பீங்க. மேனேஜரிடம் திட்டு வாங்குவீங்க. வீட்டில் இருக்கும் பெண்கள் சோம்பேறித்தனத்தோடு நடந்து கொள்வீர்கள். சரியான நேரத்திற்கு சமைக்க முடியாத சூழ்நிலை இருக்கும். யாராவது ஒருவர் உங்களோடு பேசி உங்கள் நேரத்தை செலவழித்து விட்டு செல்வார்கள். பிறகு நீங்கள் தான் சிரமப்பட நேரிடும். முன்கூட்டியே இன்றைக்கு காண வேலையை செய்து முடிங்க. அப்போ பிரச்சனையிலிருந்து தப்பிக்கலாம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொழுதுபோக்கான நாளாக இருக்கும். எந்த பிரச்சனையையும் மூளைக்கு கொண்டு போக மாட்டீங்க. எது நடந்தாலும் பரவாயில்லை இன்றைய சந்தோஷத்தை விடக்கூடாது என்று நிறைய காசு பணம் செலவு செய்வீர்கள். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வாழ்க்கைத் துணையுடன் நல்லுறவு ஏற்படும். மாமியார் வழி உறவுகள் மூலம் ஆதாயம் கிட்டும். பயணத்தின் போது கவனம் தேவை.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அறிவாற்றல் வெளிப்படக்கூடிய நாளாக இருக்கும். புத்திசாலித்தனத்தோடு நடந்து நிறைய பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். உயர் அதிகாரிகளின் பாராட்டை பெற்று பதவி உயர்வு வாங்குவதற்கு கூட சில பேருக்கு வாய்ப்பு வரும். வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். கலை துறையினருக்கு இன்று நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இன்று சின்ன சின்ன சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். வீட்டில் இருப்பவர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகும். வேலையில் கொஞ்சம் பிரஷர் இருக்கும். எதை கவனிப்பது என்று பேலன்ஸ் செய்ய முடியாமல் சில பேர் திணறுவீர்கள். எதுவாக இருந்தாலும் பிரச்சனையில் சிக்கி தவிக்கும் போது உண்மையை பேசுங்கள். பொய் சொல்லி மறைக்காதீங்க. நிச்சயம் நல்லதே நடக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும். கடன் தொல்லையை எல்லாம் சரி கட்டி விடுவீர்கள். ஆன்மீகம் சம்பந்தப்பட்ட சில விஷயங்களில் மனது ஈடுபடும். மன நிம்மதி பெறும். கர்ப்பிணிகள் உங்களுடைய ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். ஆரோக்கியத்தில் அலட்சியம் வேண்டாம். எதுவாக இருந்தாலும் உடனடியாக மருத்துவரை அணுகவும். மாணவர்களுக்கு படிப்பில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.