இன்றைய ராசிபலன் - 06.12.2023..!!!
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோகமான, மௌனமான நாளாக இருக்கப் போகின்றது. கலகலப்பாக புத்துணர்ச்சியோடு எந்த வேலையையும் செய்ய மாட்டீங்க. சோர்ந்து போய் காணப்படுவீர்கள். யாரிடமாவது கஷ்டத்தை சொல்லி பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற மனநிலை இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையோடு கஷ்டத்தை பகிர்ந்து கொள்ளுங்கள். நல்லது நடக்கும். மனதிற்கு பிடித்த இறைவனின் நாமத்தை சொல்லுங்கள். இன்று வரக்கூடிய பிரச்சனையிலிருந்து தப்பிக்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று ரொம்ப ரொம்ப ரிலாக்ஸ் ஆன நாளாக இருக்கும். உங்களுடைய நாள் அமைதியாக நகர்ந்து செல்லும். சில பேர் மழை பிரச்சனை எல்லாம் தாண்டி நிம்மதியாக வேலைக்கு போவீங்க. உங்களுடைய வேலை நல்லபடியாக தொடங்குவீர்கள். நிதி நிலைமை சீராக இருக்கும். மேலதிகாரிகளிடம் நல்ல பெயர் கிடைக்கும். மதிப்பும் மரியாதையும் கூடும் நாள் இது.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ரொம்ப ரொம்ப அழகா இருக்க போறீங்க. உங்களை பார்ப்பவர்களுக்கு எல்லாம் பிடிக்கும். அடுத்தவர்களுக்கு பிடித்த மாதிரி உங்களுடைய தோற்றம் வசீகரத்தோடு அமையும். நிறைய நல்ல மனிதர்களின் பழக்கம் கிடைக்கும். வாழ்க்கையில் முன்னேறுவதற்கு தேவையான சில முயற்சிகளை மேற்கொள்வீர்கள். இன்டர்வியூக்கு போனவர்களுக்கு எல்லாம் நல்ல வேலை கிடைக்கப் போகின்றது. சந்தோஷமாக புது முயற்சிகளை தொடங்கலாம்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் பாராட்டுகள் கிடைக்கும். உயர்ந்த பதவிகளுக்கு முயற்சி செய்யப் போறீங்க. நல்ல நல்ல மாற்றங்கள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. ஆனால் உங்களுக்கு இன்று பொருள் இழப்பு ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளது. கழுத்தில் போட்டிருக்கும் செயின், பேக்கில் வைத்திருக்கும் ஃபோன், பைசா எல்லாவற்றிலும் அதிக கவனம் தேவை. பேருந்தில் பைக்கில் ஷேர் ஆட்டோவில் செல்லும்போது ஜாக்கிரதை.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உயர்வு நிறைந்த நாளாக இருக்கும். மதிப்பும் மரியாதையும் சமூகத்தில் உங்களுக்கு உயரும். ஒரு உயர்ந்த அந்தஸ்தை அடைவதற்கு உண்டான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். அதற்காக நீங்கள் காலம் நேரம் பார்க்காமல் உழைத்திருப்பீர்கள். இந்த உயர்வு உங்களுக்கு மன நிறைவு கொடுக்கும். இந்த சந்தோஷத்தை குடும்பத்தோடு சேர்ந்து கொண்டாடுங்கள். கடவுளுக்கு நன்றி சொல்லுங்க.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் லேசான மன வருத்தம் இருக்கும். ரொம்ப தெரிஞ்சவங்களே உங்களுக்கு எதிரா வேலை செஞ்சிடுவாங்க. அதனால் மனசு டென்ஷன் ஆகும். கவலைப்படாதீங்க, எல்லாம் சரியாகும். காலமும் நேரமும் சூழ்நிலையும் எப்போதும் நமக்கு சாதகமாக இருக்காது. ஆகவே, பிரச்சனைகள் வந்தாலும் அதை பற்றிய கவலைப்பட்டு, தேவை இல்லாமல் நேரத்தை செலவு செய்யாதீங்க. இன்று தேவையற்றவர்களை பற்றி ஒரு துளி அளவும் சிந்திக்காதீர்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகமாக இருக்கும். எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் முட்டி மோதி ஜெயிக்கலாம் என்ற மனவலிமை இருக்கும். ஆனாலும் அவசரப்படக்கூடாது. வேகத்தோடு இன்று உங்களுக்கு விவேகம் தான் முக்கியம். எதுவாக இருந்தாலும் ஒன்றுக்கு பலமுறை சிந்தியுங்கள். பெரியவர்கள் பேச்சைக் கேளுங்கள். வாழ்க்கைத் துணையிடம் பிரச்சனைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று வெற்றிக்கான நாளாக அமையும். நீண்ட நாள் இழுபறியாக இருக்கக்கூடிய வேலைகளை இன்று கையில் எடுங்கள். அரசாங்கம் சம்பந்தப்பட்ட வேலைகள், கையெழுத்து வாங்க வேண்டிய வேலைகள் இப்படி ஏதாவது இருக்கும் அல்லவா, அதையெல்லாம் இன்று முயற்சி செய்தால், உங்களுக்கு நல்லது நடக்கும். ரேஷன் கார்டு வாங்குவது, ரேஷன் காட் அட்ரஸ் மாற்றுவது, டிரைவிங் லைசன்ஸ் எடுப்பது, பேன் கார்டு எடுப்பது, புது அக்கவுண்ட் ஓபன் பண்ணுவது இப்படிப்பட்ட வேலைகளை செய்யலாம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பார்த்தபடி நல்ல காரியம் நடக்காததால் மனம் உடைந்து போகும். ரொம்ப முயற்சி செய்து தோற்றுப் போனால் மனசு கஷ்டமாக தானே இருக்கும். ஆனால் அந்த கஷ்டத்தில் இருந்து நீங்கள் வெளிவர வேண்டும். வாழ்க்கையில் தோற்றுத் தோற்று வென்றவர்களை உதாரணமாக எடுத்துக் கொண்டு இன்று போராடுங்கள். நிச்சயம் உங்களுக்கு நல்லது நடக்கும். குலதெய்வத்தை நினைத்துக் கொள்ளுங்கள். உதவிக்கு நண்பர்களை கூப்பிடலாம். தவறு கிடையாது. விடா முயற்சி உங்களுக்கு விஸ்வரூப வெற்றியை கொடுக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று சோர்வான நாளாக இருந்தாலும், உங்களை தூக்கி விட நாலு பேர் கை கொடுப்பார்கள். அடுத்தவர்களுடைய உதவியின் மூலம் இன்று நல்லது நடக்கும். நல்ல நண்பர்கள் நல்ல உறவினர்கள் பற்றி நீங்கள் புரிந்து கொள்வீர்கள். உங்கள் வாழ்க்கை துணை உங்களுக்கு உதவியாக இருப்பாங்க. மாமியார் வழி உறவுகள் மூலம் நல்லது நடக்கும். வியாபாரம் செழிக்கும். விவசாயிகளுக்கு சின்ன சின்ன பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது. பணம் விஷயத்தில் கவனம் செலுத்துங்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று மனதில் எந்த ஒரு பயமும் இருக்காது. மேனேஜர் டீம் லீடர் யாரையும் பார்க்க மாட்டீங்க. மனதுக்கு பட்டதை வெளிப்படையாக பேசுவீர்கள். இதனாலேயே சில சம்பவங்கள் உங்களுக்கு நடக்கும். பிரச்சனைகள் சூழும். ஆகவே நாவடக்கம் தேவை. பொறுமையாக இருக்கவும். என்னதான் மேலதிகாரிகள் தவறு செய்தாலும் அதை தட்டிக் கேட்பதில் ஒரு அதிகாரம் வேண்டாம். அதிகாரம் இன்று உங்களுக்கு ஆபத்தை கொடுக்கும் ஜாக்கிரதை.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று மனசு நிலையாக இருக்காது. அலைமோதும், இதை செய்யலாமா வேண்டாமா, என்று குழப்பத்திலேயே இருப்பீர்கள். பெரிய அளவில் பணம் சம்பந்தப்பட்ட பரிவர்த்தனையில் ஈடுபட வேண்டாம். சொத்து பிரச்சனையை இன்று கையில் எடுக்க வேண்டாம். உங்களுடைய அன்றாட வேலையை பாருங்க. சாமி கும்பிடுங்க, மனதை அமைதியா வச்சுக்கோங்க. இதை செய்தாலே என்று போதும்.