Tuesday, 5 December 2023

இன்றைய ராசிபலன் - 05.12.2023..!!!

SHARE

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மன அமைதியான நாளாக இருக்கப் போகின்றது. எந்த பிரச்சனை எப்படி இருந்தாலும், உங்களுக்கு பதட்டமே இருக்காது. பொறுமையாக பிரச்சனைகளை கையாளும் பக்குவம் இருக்கும். பெரிய அனுபவசாலிகள் போல நடந்து கொள்வீர்கள். உங்களைப் பார்த்து உங்கள் உடன் இருப்பவர்களே ஆச்சரியப்படுவார்கள் என்றால் பாருங்களேன். இன்றைய நாள் ரொம்பவும் சிறப்பான நல்ல அனுபவங்களை தரக்கூடிய நாளாக அமையும். நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ளுங்கள்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் முயற்சிகளில் உடனடியாக வெற்றி கிடைக்காது. பெரிய அளவில் போராட்டமே நடத்திய பிறகு தான் நல்லது நடக்கும். அதற்காக எந்த வேலையையும் செய்யாமல் கம்முனு இருக்கக் கூடாது. உங்களுடைய முயற்சிகளை நீங்கள் மேற்கொள்ளுங்கள். அதற்கான பலன் வெற்றியாக இருந்தாலும், தோல்வியாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் உங்களுக்கு வரவேண்டும்.

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வெற்றிக்கான நாளாக இருக்கும். நீண்ட நாள் முயற்சி செய்த சில காரியங்களை இன்று வெற்றி அடையச் செய்து சந்தோஷப்படுவீர்கள். கோர்ட் கேஸ் வழக்குகளில் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும். சொத்தில் இருந்து ஒரு தொகை உங்கள் கைக்கு கிடைக்கும். வீடு நிலம் வாங்குவதற்கு பிளான் செய்வீங்க. எல்லாம் நல்லபடியாக முடியும். லாபம் நிறைந்த இந்த நன்னாளில் இறைவனுக்கு நன்றி சொல்லவும்.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் உடல் சோர்வு இருக்கும். மகிழ்ச்சியான தருணங்களில் கூட உங்களால் முழுமையாக வெற்றியை கொண்டாட முடியாத சூழ்நிலை இருக்கும். பரவாயில்லை ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். நண்பர்களின் மூலம் நல்லது நடக்கும். வியாபாரிகளுக்கு சில பேருக்கு நஷ்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. குறிப்பாக காய்கறி தொழில் செய்பவர்கள் பால் வியாபாரம் செய்பவர்கள் பழ வியாபாரம் செய்பவர்கள் இன்று முதலீட்டில் கூடுதல் கவனம் செலுத்தவும்.

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சுறுசுறுப்பான நாளாக இருக்கும். நேரத்தோடு எழுந்து நேரத்தோடு உங்களுடைய வேலையை தொடங்கி மன நிறைவோடு இந்த நாளை கடந்து செல்வீர்கள். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த சின்ன சின்ன பிரச்சனைகள் சரியாகும். சில பேருக்கு நிதி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருக்கும். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். கந்துவட்டிக்காரர் கிட்ட போகாதீங்க அதிக வட்டிக்கு கடன் வாங்காதீங்க.

கன்னி


கன்னி ராசிக்காரர்கள் இன்ற சில பல சவால்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை இருக்கும். உங்களிடம் பழகும் புது மனிதர்கள் முதல், நண்பர்கள் உறவினர்கள் வரை உங்களோடு போட்டி போட்டுக் கொண்டே இருப்பார்கள். வேலையில் சவால்கள், வியாபாரத்தில் சவால்கள், என்று இன்று நீங்கள் சந்திக்கும் சவால்கள் உங்களுக்கு ஒரு புது அனுபவத்தை கொடுக்கும். இந்த நாள் இறுதியில் உடல் சோர்வு மன சோர்வு இருக்கும். இரவு பிரச்சனைகள் மறந்து நல்ல தூக்கம் வர குலதெய்வ வழிபாடு செய்யுங்கள்.

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் பதவி தேடி வரக்கூடிய நாளாக அமையும். எதிரிகளோடு போட்டியிட்டு சவால் விட்டவர்கள் எல்லாம் இன்று ஜெயித்துக் காட்டுவீர்கள். காலரை தூக்கிக் கொண்டு உங்களுடைய வெற்றியை கொண்டாடுவீர்கள். கணவன் மனைவி ஒற்றுமை பலம் பெரும். வியாபாரம் சிறப்பாக செல்லும். புதிய முதலீடு செய்யலாம் லாபம் அதிகரிக்கும்.

விருச்சிகம்


விருச்சக ராசிக்காரர்களுக்கு இன்று ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். மேலதிகாரிகளிடம் பாராட்டு கிடைக்கும். நீங்கள் செய்யக்கூடிய சின்ன சின்ன விஷயங்கள் கூட பெரிய அளவில் நன்மையை தரக்கூடியதாக அமையும். சொல்ல போனால் நீங்கள் இன்று ராசியானவர்களாக வலம் வருவீர்கள். நாலு பேருக்கு நல்லது செய்யக்கூடிய வாய்ப்பு கிடைத்தால் செய்யுங்கள். இன்னும் வாழ்க்கையில் உயர முடியும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு ஒரே பதட்டமாக இருக்கும். இன்று எப்படி வேலைக்கு போவது, எப்படி படிப்பது, எப்படி வியாபாரம் செய்வது என்றுஎல்லா தரப்பினரும் ஒரு குழப்பத்தோடே திரிவீர்கள். ஏனோ தெரியாது. ஆனால் பிரச்சனைகள் எதுவுமே இருக்காது. மனதை அமைதி படுத்த காலையில் எழுந்தவுடன் ஓம் நமசிவாய மந்திரம் சொல்லுங்கள். மனசுக்குள் உங்களுக்கு பிடித்த கடவுளின் பெயரை சொல்லிக்கொண்டே இருங்கள். பதட்டம் நீங்கும். பதட்டத்தோடு யாரிடமும் பேசாதீங்க. புது வேலையை தொடங்க வேண்டாம்.

மகரம்


மகர ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் எல்லா விஷயத்திலும் உஷாராக இருக்கணும். நம்முடைய நண்பன் தானே, நம்முடைய மேனேஜர் தானே, நம்முடைய டீம் லீடர் தானே, என்று நம்பி எதையும் யாரிடமும் சொல்லாதீங்க. பிறகு அந்த விஷயம் உங்களுக்கே பாதகமாக திரும்பிவிடும். சில விஷயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று சொல்லுவார்கள் அல்லவா. அதுபோலதான் என்று நீங்கள் சின்ன சின்ன விஷயங்களிலும் அக்கறை எடுத்து யோசித்து செயல்பட்டால் வரும் பிரச்சனையிலிருந்து தப்பிக்கலாம். ஏமாறாமல் இருக்கலாம்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வெறித்தனமாக அழகாக இருக்க போகின்றது. நினைத்ததை சாதித்து காட்டுவீர்கள். அடம்பிடிக்க போகிறீர்கள். எதையுமே விட்டுக் கொடுக்க மாட்டீங்க. இதனால் சில பேருக்கு இழப்புகளும் இருக்கும். லாபமும் இருக்கும். வேகத்தோடு நடப்பதை விட, விவேகத்தோடு நடப்பது நல்லது என்பதை இன்று நீங்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். எல்லாம் நல்லபடியாக முடித்து விட்டது. இனி கவலையே இல்லை என்று எதையும் உதாசீனப்படுத்தாதீங்க.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உழைப்பு நிறைந்த நாளாக இருக்கும். எப்படியாவது கஷ்டப்பட்டு இந்த டார்கெட்டை முடித்தே ஆக வேண்டும் என்று மனதில் ஒரு முடிவு கட்டி வேலையில் இறங்குவீங்க. நிறைய போராட்டங்கள் வந்தாலும், அதை தாண்டி நல்ல விஷயங்களை செய்யக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். சந்தோஷம் நிறைந்த நாள் இது. சில பேருக்கு பண பற்றாக்குறை இருக்கும். அது இன்னும் ஒரு சில நாட்களில் சரியாகிவிடும் கவலைப்படாதீங்க.
SHARE