இன்றைய ராசிபலன் - 02.12.2023..!!!
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சின்ன சின்ன பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டிய நாளாக இருக்கும். குடும்பத்தில் சண்டைகள் வர வாய்ப்புகள் உள்ளது. கணவன் மனைவி வாக்குவாதம் செய்ய வேண்டாம். யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்த நடக்கவும். முன்கோபத்தை குறைக்கவும். வேலை செய்யும் இடத்தில் அனுசரணையாக நடந்து கொள்ளுங்கள். மேல் அதிகாரிகளை எதிர்த்து பேச வேண்டாம். இன்று பணிவோடு நடந்து கொண்டால் பிரச்சனைகள் இல்லை.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் இன்று கடினமாக உழைத்தால் வெற்றி காணலாம். எதிலும் சுலபமாக வெற்றியை அடைய முடியாது. ஆகவே சோம்பேறித்தனத்தோடு இல்லாமல் புத்துணர்ச்சியோடு எல்லா வேலைகளையும் செய்யுங்கள். ஒன்றுக்கு பலமுறை சிந்தித்து ஒரு முடிவை எடுக்க வேண்டும். உடல் சோர்வு இருக்கும். மனசோர்வு இருக்கும். இன்றைய நாள் இறுதியில் குடும்பத்தோடு கோவிலுக்கு சென்று வரவும் நல்லது நடக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் குழப்பங்கள் நிறைந்த நாளாக இருக்கும். எந்த முடிவை எடுப்பது என்று தடுமாற்றத்தோடு இருப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் சில பிரச்சனைகள் மனதை குழப்பும். இந்த வேலை நமக்குத் தேவைதானா என்ற அளவுக்கு சிந்தனை போகும். கொஞ்சம் அவசரப்பட வேண்டாம். பிரச்சனைகள் சரியாக சில நாட்கள் எடுக்கும். ஆனால் இந்த வேலையை விட்டால் வேறு நல்ல வேலை கிடைக்குமா என்று கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். வீண் பழி உங்கள் மீது விழுந்தாலும் அதை கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள். நல்லதே நடக்கும் பொறுமை காக்கவும்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் இன்று விழிப்புணர்வோடு செயல்பட வேண்டும். எந்த ஒரு விஷயத்திலும் கண்மூடித்தனமாக முடிவு எடுக்கக் கூடாது. மூன்றாவது நபரை நம்பாதீங்க. இன்று புதுசாக ஏதாவது வாங்க வேண்டும் என்றால், அந்த விஷயத்தை நாளை தள்ளிப் போடவும். சின்ன சின்ன விஷயங்களில் ஏமாற வாய்ப்புகள் உள்ளது. பேருந்தில் செல்பவர்கள் ஷேர் ஆட்டோவில் செல்பவர்கள் கூடுதல் கவனத்தோடு இருக்கவும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் என்று எல்லோரிடத்திலும் கொஞ்சம் அனுசரித்து நடக்க வேண்டும். உறவுகளுக்குள் சண்டை சச்சரவுகள் வர வாய்ப்புகள் உள்ளது. வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு எதிராக சதி நடக்கும். நண்பர்களும் எதிரிகளாக மாறுவார்கள். வியாபாரத்தில் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். பார்ட்னரை கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம். முதலீடு செய்வதில் அக்கறை காட்டுங்கள். முன்பின் தெரியாத தொழிலில் காலை வைக்காதீங்க.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் திறமைகள் வெளிப்படக்கூடிய நாராக இருக்கும். எவ்வளவு பெரிய பிரச்சினையாக இருந்தாலும் அதை சுலபமாக சமாளித்து அதற்கான தீர்வை சொல்லிவிடுவீர்கள். பாராட்டும் புகழும் கிடைக்கும். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். மனநிறைவான இந்த நாளில் கடவுளுக்கு நன்றி தெரிவியுங்கள். குழந்தைகளால் மனது நிறைவடையும். மாணவர்களும் கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று வீண் செலவு ஆவதற்கு வாய்ப்புகள் உள்ளது. சில பேருக்கு மருத்துவ செலவு ஏற்படும். சில பேருக்கு பணத்தை ஏமாற கூட வாய்ப்புகள் உள்ளது. ஆகையால் பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருந்துக்கோங்க. சுப காரிய விஷயங்களை அடுத்த நாள் தள்ளி போடுங்கள். நிலம் வீடு வண்டி வாகனம் வாங்குவதாக இருந்தால் அதற்கான பேச்சைக் கூட இன்று எடுக்க வேண்டாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று உடல் சோர்வு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. எந்த வேலையிலும் கவனம் இருக்காது. அலட்சிய போக்கினால் சின்ன சின்ன பிரச்சனைகள் வரும். சின்ன சின்ன கெட்ட பெயரும் வரும். பிறர் முன்பு தலையைக் குனிந்து நிற்கக்கூடிய சூழ்நிலைக்கு தள்ளப்படக்கூடாது என்றால், விளையாட்டுத்தனத்தை இன்று கைவிட வேண்டும். கூடுதல் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். பெரியவர்கள் பேச்சைக் கேட்க வேண்டும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று வேண்டாத வம்புகள் வீடு தேடி வந்து நிற்கும். சின்ன சின்ன பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய சூழல் உண்டாகும். இருந்தாலும் இந்த நாள் இறுதியில் பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். குடும்பத்தில் விருந்தாளிகளின் வருகையால் சுப செலவு ஏற்படும். இன்று மாலை குடும்பத்தோடு வெளியிடங்களுக்கு சென்று நேரத்தை செலவழிப்பீர்கள். கூடவே காசும் கொஞ்சம் கரையும். பிள்ளைகள் சொல் பேச்சு கேட்க மாட்டாங்க.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வெற்றி காணக்கூடிய நாளாக இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். புதிய தொழில் தொடங்குவது சம்பந்தமான விஷயங்களில் பேச்சுவார்த்தை நடத்தலாம். வங்கி கடன் முயற்சி செய்யலாம். இன்று நீங்கள் தொடங்கக் கூடிய நல்ல காரியம் உங்களுக்கு சுபத்தை கொடுக்கும். சில பேருக்கு உயர் பதவிகளுக்கான பேச்சுகள் கூட அலுவலகத்தில் அரசல் புரசலாக பேசப்படும். மனது சந்தோஷம் அடையும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இன்று நீங்கள் உண்டு உங்க வேலை உண்டு என்று இருக்க வேண்டும். அனாவசியமாக அடுத்தவர்களை பற்றி புறம் பேசக்கூடாது. வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளை பற்றி யாரிடமும் நல்ல விஷயத்தை கூட பேசாதீங்க. அது ஒன்றுக்கு மூன்றாக உங்கள் பெயரை கெடுக்க வாய்ப்புகள் உள்ளது. குடும்பத்தில் சண்டைகள் வர வாய்ப்புகள் உள்ளது. கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் வேண்டாம். பிள்ளைகளுடைய போக்கில் கவனம் செலுத்துங்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று மனசு சந்தோசமாக இருக்கும். வாரத்தின் இறுதி நாள் என்பதால் கூட இந்த சந்தோஷம் வரலாம். மனநிறைவான இந்த நாளில் குடும்பத்தோடு நேரத்தை செலவு செய்வீர்கள். கமிஷன் தொழில் செய்பவர்களுக்கு இந்த நாள் லாபகரமான நாளாக அமையும். தடைபட்டு வந்த சுபகாரிய பேச்சுக்கள் மீண்டும் நடக்கும். ஆரோக்கியத்தில் மேம்பாடு இருக்கும். நண்பர்களின் உதவியால் ஆதாயம் கிட்டும்.