யாழில் ஆரம்பமான மலர் கண்காட்சி..!!! (Video)
நல்லூர் - சங்கிலியின் பூங்காவில் மரநடுகை மாதத்தை முன்னிட்டு வட மாகாணத்தில் ஆண்டு தோறும் "கார்த்திகை வாசம்" என்ற பெயரில் நடாத்திவரும் மலர் கண்காட்சி இன்று (22.11.2023) பிற்பகல் ஆரம்பமானது.
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் தாவர உற்பத்தியாளர்களும் இணைந்து நடாத்தும் குறித்த கண்காட்சி இந்த மாதம் (30.11.2023) ஆம் திகதி வரை தினமும் காலை 8:30 மணி தொடக்கம் இரவு 7.00 மணிவரை நடைபெறவுள்ளது.
நிகழ்வில் வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், சமூக அரசியற் செயற்பாட்டாளர் க.அருந்தவபாலன், தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன், உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.