Tuesday 7 November 2023

கொழும்பில் பலத்த மழை; போக்குவரத்து பாதிப்பு..!!!(Video)

SHARE


கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று (07) மாலை பலத்த மழை பெய்தது.

பலத்த மழையுடன் கடும் காற்றும் வீசியதை அடுத்து, மரங்கள் முறிந்து வீழ்ந்தமையினால், கொழும்பின் பல பிரதான வீதிகளின் போக்குவரத்து ஸ்தம்பிமடைந்திருந்தது.

மரமொன்று முறிந்து வீழ்ந்தமையினால்,கொழும்பு - டுப்ளிகேஷன் வீதியின் போக்குவரத்தும் தடைப்பட்டிருந்தது.

இரண்டு வாகனங்களின் மீது மரம் முறிந்து வீழ்ந்துள்ளது. எனினும், எவருக்கும் காயம் ஏற்படவில்லை.

இதனிடையே , கொழும்பு 07 - பௌத்தாலோக மாவத்தையில் மரமொன்று முறிந்து வீழ்ந்ததில், போக்குவரத்தில் இடையூறு ஏற்பட்டது.

இதனிடையே, மாளிகாவத்தை, டேம் ஸ்ட்ரீட், பொரளை, கொட்டாஞ்சேனை உள்ளிட்ட பல பகுதிகளின் பிரதான, குறுக்கு வீதிகளிலும் மரங்கள் மற்றும் கிளைகள் முறிந்து வீழ்ந்ததமையினால், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டது.

மருதானைக்கும் பேஸ்லைன் வீதிக்கும் இடையில் மரமொன்று முறிந்து வீழ்ந்ததால் களனிவெளி மார்க்கத்தில் ரயில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்தது.

இதன் காரணமாக களனிவெளி மார்க்கம் உள்ளிட்ட அனைத்து மார்க்கங்களிலும் ரயில் சேவைகள் தாமதமடைந்துள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.



SHARE