Wednesday 1 November 2023

கொழும்பில் போக்குவரத்து முடக்கம்..!!!

SHARE

ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக கொழும்பு காலி முகத்திடல் வீதி செரமிக் சந்தியில் இருந்து லோட்டஸ் சுற்றுவட்ட வீதி போக்குவரத்து தடைபட்டுள்ளது.

தொழில் வல்லுநர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்ட பேரணியால் அப்பகுதியில் வாகன போக்குவரத்து தடைபட்டுள்ளது.

குறித்த வீதியை பயன்படுத்தும் சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
SHARE