Thursday, 30 November 2023

யாழில் மீற்றர் வட்டி மாபியாக்கள் - தகவல் தர கோரும் பொலிஸ்..!!!

SHARE

வட்டிக்கு பணம் வழங்கி , சொத்துக்களை பறிமுதல் செய்யும் மாபியாக்கள் யாழில் அதிகரித்து உள்ளதாகவும் , அவர்கள் தொடர்பில் தகவல்கள் தெரிந்தவர்களோ , அவர்களால் பாதிக்கப்பட்டவர்களோ தன்னிடம் நேரடியாக முறைப்பாடு செய்ய முடியும் என யாழ்.மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெகத் நிஷாந்த தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

அதீத வட்டி , மீற்றர் வட்டி என்பவற்றுக்கு பெருந்தொகை பணங்களை வழங்கி , அந்த பணத்தினை வாங்கியவர்கள் மீள செலுத்த முடியாத போது , அவர்களிடம் இருந்து சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை பறிமுதல் செய்யும் சம்பவங்கள் தொடர்பில் எமக்கு தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன

இது தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் உரிய முறையில் முறைப்பாடுகள் செய்ய தயங்குவதால் , பொலிஸாரினால் மேலதிக நடவடிக்கை எடுக்க முடியாத நிலைமை காணப்படுகிறது.

யாழ்ப்பாணத்தில் தற்போது "மீற்றர் வட்டி" மாபியாக்கள் அதிகரித்துள்ளன. எனவே பாதிக்கப்பட்டவர்கள் துணிந்து முறைப்பாடு செய்தால் , அவர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுப்போம் என மேலும் தெரிவித்தார்

அதேவேளை யாழில். கடன் தொல்லைகளால் உயிர்மாய்த்த பலரின் உயிர் மாய்ப்புக்கு இந்த மீற்றர் வட்டி மாஃபியாக்களே காரணம் என உயிர்மாய்த்தவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
SHARE