யாழ்ப்பாணம் - நவாலி பகுதியில் இன்றையதினம் திங்கட்கிழமை துவிச்சக்கர வண்டியில் சென்ற முதியவர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த அருளப்பு விமலதாஸ் (வயது 70) என்ற முதியவரே உயிரிழந்துள்ளார்.
நவாலி சென்பீற்றர்ஸ் தேவாலயம் அருகில் உள்ள வீதியில் பயணித்துக்கொண்டிருந்த வேளை முதியவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.