Monday 6 November 2023

கமலின் புதிய படத் தலைப்பு ‘தக் லைஃப்’

SHARE


கமல் ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் KH 234 படத்திற்காக கமல்ஹாசனின் லுக் டெஸ்ட் சமீபத்தில் நடந்து முடிந்தது.

கடந்த அக்டோபர் 27 ஆம் திகதி KH234 படத்தின் தொடக்க விழா நிகழ்ச்சி வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த நிகழ்ச்சியில் கமல், மணிரத்னம், ரவி, கே. சந்திரன், ஏ.ஆர். ரகுமான், அன்பறிவு, ஶ்ரீகர் பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கமல் ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து KH234 படத்தை தயாரிக்கிறது. கமலும் மணிரத்னமும் நாயகன் படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்குப் பின் இணையும் படம் என்பதால் KH234 படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

KH 234 படத்தின் டைட்டில் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. இதற்காக ஒரு வித்தியாசமான போஸ்டரை படக்குழு வெளியிட்டது. அந்த போஸ்டரில் மகாகவி பாரதியாரின் வரிகளும் இடம்பெற்றிருந்தது.

KH234 படத்தில் நடிகை த்ரிஷாவும் நடிகர் துல்கர் சல்மானும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதாகவும் கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது KH234 படத்தில் துல்கர் சல்மான் மற்றும் த்ரிஷா இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இதைதொடர்ந்து அறிவித்தபடி மாலை 5 மணிக்கு அறிமுக வீடியோவுடன் KH 234 படத்தின் டைட்டில் வெளியிடப்பட்டது.

கமலின் படத்துக்கு ‘தக் லைஃப்’ (Thug Life) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த அறிமுக வீடியோவில், ”என் பேரு ரங்கராயர் சக்திவேல் நாயக்கன். காயல்பட்டினக்காரன்” என தனக்கே உரிய பாணியில் கமல் பேசுகிறார். அதன் பிறகு வரும் ஆக்சன் காட்சிகளும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது.

முன்னதாக,

மணிரத்தினத்தின் இயக்கத்தில் வெளியான “ஓ காதல் கண்மணி” படத்தில் ஹீரோவாக துல்கர் சல்மான் நடித்திருந்தார்.

அதேபோல் “ஆய்த எழுத்து” படத்தில் த்ரிஷா நடித்திருந்தார், கமலின் “மன்மதன் அம்பு” மற்றும் “தூங்க வனம்” ஆகிய படங்களிலும் த்ரிஷா நடித்திருந்தார்.

தற்போது துல்கர் மற்றும் த்ரிஷா இருவரும் கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்க இருப்பது படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.





SHARE