இளம் தம்பதி விபரீத முடிவு ;தவிக்கும் குழந்தை..!!!
அம்பாறை - திருக்கோவில் பிரதேசத்தில் இளம் தம்பதி தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
கணவனும் மனைவியும் இன்று (21) அவர்களது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் திருக்கோவில் 3 பகுதியைச் சேர்ந்த 28 வயதான மனோகரன் தேவதர்சன் மற்றும் மற்றும் 23 வயதுடைய நிலுயா ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
இருவரும் 3 வருடத்திற்கு முன் திருமணமாகி இரண்டு வயதுடைய பெண் குழந்தை இருப்பதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் இருவரின் சடலங்களும் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.