Tuesday, 21 November 2023

பொலிஸாரின் பலத்த பாதுகாப்புடன் வீட்டிற்கு கொண்டுவரப்பட்ட யாழ். இளைஞனின் சடலம்..!!!

SHARE

யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பொலிஸாரின் சித்திரவதைக்கு உள்ளான நிலையில் சித்தங்கேணி பகுதியைச் சேர்ந்த அலெக்ஸ் என்ற இளைஞனின் உயிரிழப்பு பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் உயிரிழந்த இளைஞனின் சடலம் நேற்று இரவு பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் சித்தங்கேணியில் உள்ள இளைஞனின் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இதன்போது, வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தை அண்மித்த வீதிகளில் வீதித் தடைகள் போடப்பட்டு பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இளைஞனின் மரணம் தொடர்பில் விசாரணையை மேற்கொள்ள கொழும்பிலிருந்து விசேட பொலிஸ் குழு களமிறக்கப்பட்டவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


SHARE