Friday, 24 November 2023

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதியில்..!!!

SHARE


இந்நாட்களில் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் எப்போது வெளியாகும் என மாணவர்கள் இந்நாட்களில் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

இவ்வாறானதொரு பின்னணியில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதியில் வெளியிட எதிர்பார்ப்பதாக என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்திருந்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், இந்த நாட்களில் பரீட்சை பெறுபேறுகளை கணனிமயமாக்கும் பணிகள் இடம்பெற்று வருவதாக தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், பொதுப் பரீட்சை பெறுபேறுகளை இன்னும் இரண்டு நாட்களில் வெளியிட முடியும் என அண்மையில் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
SHARE