மண்சரிவில் சிக்கி இரு யுவதிகள் உயிரிழப்பு..!!!
பதுளை மாவட்டத்தின் ஹாலஎல பிரதேசத்தில் பெய்து வந்த அடை மழை காரணமாக வீடு ஒன்றில் மேல் மண் மேடு சரிந்து விழுந்ததில் இரண்டு யுவதிகள் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
நேற்று( 22) மாலை இப் பிரதேசத்தில் நூற்று மி.மீ. மேற்பட்ட மழை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் ஹாலிஎலஇ உடுவர இ6ம் கட்டை பகுதியில் வீடொன்றின் மீது மண் மேடு சரிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 21 மற்றும் 22 மதிக்கத்தக்க இரு இளம் யுவதிகள் புதையுண்டதாகவும் அயலவர்களின் உதவியுடன் இருவரையும் மீட்டெடுத்து பதுளை மாவட்ட வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கென கொண்டு சென்ற போது ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்த பதுளை போலீசார் இவ்வனத்தம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக மேலும் தெரிவித்தனர் .