இலங்கையில் பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய துறைமுகத்தில் நாக பாம்பு படமெடுத்து ஆடி அங்கிருந்த பக்தர்களை பரவசப்படுத்தியுள்ளது.
காட்சி கொடுத்த நாக பாம்பின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இதேவேளை, எதிர்வரும் தை மாதம் நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய கும்பாவிஷேகம் நடைபெறவுள்ளது.
தற்போது, ஆலயத்தில் புனருத்தாரண வேலைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.