நல்லூரில் வீதித்தடை..!!!
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் நடைபெறவுள்ள கந்தசஷ்டி உற்சவ காலத்தையொட்டி வீதிகள் தடை செய்யப்படவுள்ளன என்று யாழ்.மாநகர சபை அறிவித்துள்ளது,
அதன்படி எதிர்வரும் 14 ஆம் திகதி தொடக்கம் 17 திகதி வரை மற்றும் 19 ஆம் திகதிகளில் பிற்பகல் 5 மணி தொடக்கம் 6 மணி வரையும் 18 ஆம் திகதி சூரன்போர் அன்று நண்பகல் 12 மணி தொடக்கம் இரவு 7 மணிவரையும் ஆலய சுற்று வீதி தடைசெய்யப்படும் .
மக்கள் மாற்றுப் பாதைகளை வழமைபோல் கடைப்பிடிக்குமாறு மாநகர சபை ஆணையாளர் இ.த.ஜெயசீலன் அறிவித்துள்ளார் .