யாழில் வரலாற்று சாதனை படைத்த மாணவி வனிஷ்கா கௌரவிப்பு ..!!!
புலமைப்பரிசில் பரீட்சை யாழ்ப்பாண மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவிக்கு மக்கள் வங்கி யாழ் பல்கலைக்கழக கிளையினர் கெளரவித்தனர்.
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ் இந்து மகளிர் ஆரம்ப பாடசாலை மாணவி ஜெரால்ட் அமல்ராஜ் வனிஷ்கா 196 புள்ளிகளைப் பெற்று யாழ் மாவட்டத்தில் முதலிடம் பெற்றார்.
குறித்த மாணவியை சந்தித்த மக்கள் வங்கி யாழ் பல்கலைக்கழக கிளையினர் இன்றைய தினம் திங்கட்கிழமை பாடசாலை அதிபர் மற்றும் யாழ் கல்வி வலய திட்டமிடல் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஆகியோரின் பங்குபற்றலுடன் தமது கெளரவிப்பை வழங்கினர்.